இந்தியா சுதந்திர போராட்டத்தில் அளப்பறிய பங்காற்றிய தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்தநாள் ஆண்டுதோறும் அக்டோபர் 2ம் தேதி கொண்டாடப்படுகிறது.
அதுமட்டுமின்றி, காந்தி ஜெயந்தி அன்று அரசு விடுமுறை அளிக்கப்பட்டு, மகாத்மா காந்தியை நினைவு கூறும் வகையில், பல்வேறு கூட்டங்கள், நிகழ்ச்சிகள் அரசு சார்பில் நடத்தப்படுவது வழக்கம்.
ஆனால், இந்தாண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அரசு சார்பில் மரியாதை செய்யும் நிகழ்ச்சி மட்டும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுகிறது.
இந்நிலையில், தங்கள் சிந்தாந்தக்கு எதிரான காந்தியை கொண்டாடுவதில் தொடர்ந்து தயக்கும் காட்டும் மோடி அரசு, இந்த ஆண்டு திட்டமிட்டு காந்தி ஜெயந்தியை புறக்கணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
அதாவது, ஆண்டுதோறும் நாடாளுமன்றத்தின் கட்டிடத்தின், மைய மண்டபத்தில் நடைபெறும் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் மலரஞ்சலி நிகழ்வை இந்தாண்டு கொரோனா தொற்றைக் காரணம் காட்டி ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தீவிரமாக இருக்கும் காலக்கட்டத்தில் அயோத்தில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டும் விழா, கர்நாடகவில் இந்து மத பண்டிக்கை என பல நிகழ்ச்சிகளை நடத்த காரணமாக இருந்த மத்திய மோடி அரசு, திட்டமே இந்தாண்டு காந்தி ஜெயந்தியை புறக்கணித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மகாத்மா காந்தியின் மலரஞ்சலி நிகழ்வை ரத்து செய்துள்ளதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி சு.வெங்கசேடன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தேசத்தந்தை மகாத்மா காந்திக்கு பிறந்தநாளை முன்னிட்டு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடத்த வேண்டிய மலரஞ்சலி நிகழ்வை கொரோனா காரணங்காட்டி ரத்து செய்துள்ளது மத்திய அரசு.
"இன்னும் செய்யுங்கள்.
ஆனால் காலம் அநீதியின் கைகளில் என்றென்றும் கட்டுண்டு கிடந்ததாக வரலாறும் இல்லை; புராணங்களும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார். பலரும் தங்களின் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.