மோடி அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் திவிரமடைந்து வருகிறது. பஞ்சாப்பில் 6வது நாளாக விவசாயிகள் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.
தயில் தண்டவாளங்களை முற்றுகையிட்டு குடில் அமைத்து தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்தக்கட்ட போராட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்து அக்டோபர் 1ம் தேதி ஆலோசனை நடத்தப்பட்டு அறிவிக்கப்படும் என்றும் அம்மாநில விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே எஸ்.பி.எஸ். நகரில் நடந்த விவசாயிகளின் போராட்டத்தில் கலந்துக்கொண்ட அம்மாநில முதலமைச்சர் கேப்டன் அம்ரிந்தர் சிங், மத்திய அரசு மாநிலங்களிடம் இருந்து அனைத்தையும் பறித்துக்கொண்டால் மாநில அரசுகளால் எப்படி ஆட்சி புரிய முடியும் என கேள்வி எழுப்பினார்.
தொடர் பேசிய அவர், புதிய வேளாண் சட்டங்கள் முழுக்க முழுக்க அரசியல் சாசனத்திற்கு எதிராக உள்ளது. குடியரசுத்தலைவர் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்திருந்தாலும் , இந்த சட்டங்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுக இருக்கிறோம். விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என கூறியுள்ளார்.