இந்தியா

உயர்சாதி ஏழைகளால் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் OBC பிரிவினர்: சுப்ரீம் கோர்ட் விசாரணை கோரும் டி.ஆர்.பாலு!

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் ஓ.பி.சி பிரிவினருக்கு ஒரு இடம் கூட அளிக்கப்படவில்லை என்று தி.மு.க மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு குற்றஞ்சாட்டியுள்ளார்.

உயர்சாதி ஏழைகளால் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் OBC பிரிவினர்: சுப்ரீம் கோர்ட் விசாரணை கோரும் டி.ஆர்.பாலு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்ற மக்களவையில் பேசிய தி.மு.க எம்.பி. டி.ஆர்.பாலு, மருத்துவப் படிப்பு உள்பட அனைத்துத் துறைகளிலும் ஓ.பி.சி பிரிவினர் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திற்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவிலும் இந்த அவலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என குற்றஞ்சாட்டினார்.

இதுதொடர்பாக ஏற்கெனவே தமிழக எதிர்க்கட்சித் தலைவர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதமும் எழுதியுள்ளார். ஓ.பி.சி இடஒதுக்கீடு குறித்து கடந்த ஜூலை மாதம் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பின்பற்றி நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியதையும் சுட்டிக்காட்டினார்.

உயர்சாதி ஏழைகளால் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் OBC பிரிவினர்: சுப்ரீம் கோர்ட் விசாரணை கோரும் டி.ஆர்.பாலு!

மேலும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற சிவில் சர்வீஸ் பணிகளுக்கான அனைத்து வகை தேர்வுகளிலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு (EWS) மிகக் குறைவான கட் ஆஃப் மதிப்பெண்களே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதனால், இதர பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பிரிவினர் அதிக மதிப்பெண்களை பெற்றிருந்தாலும் அவர்களால் அரசுப் பணிகளில் சேர முடியாத அவலம் நிகழ்கிறது எனக் குறிப்பிட்ட டி.ஆர்.பாலு, இதுதொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதியின் மேற்பார்வையில் வெளிப்படையான விசாரணை நடத்தவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

banner

Related Stories

Related Stories