இந்தியாவைச் சேர்ந்த பிரபல பணப்பரிமாற்ற செயலியான "Paytm", விதிமுறைகளை மீறியதாகக் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது.
ஆன்லைன் சூதாட்டத்தைச் சுற்றி Paytm நிறுவனத்தின் செயல்பாடுகள் உள்ளதால் அது கூகுளின் விதிகளை மீறுவதாகக் கூறப்படுவதால் கூகுள் பிளேஸ்டோரிலிருந்து Paytm பயன்பாட்டை அகற்றியது.
கூகுளின் ஆண்ட்ராய்டு பாதுகாப்பு மற்றும் தனியுரிமை துறையின் துணைத் தலைவர் சுசேன் ஃப்ரே ஒரு வலைபதிவில் கூறியதாவது "நாங்கள் ஆன்லைன் சூதாட்ட விடுதிகளை அனுமதிக்க மாட்டோம் அல்லது விளையாட்டு பந்தயத்தை எளிதாக்கும் எந்தவொரு கட்டுப்பாடற்ற சூதாட்ட பயன்பாடுகளையும் ஆதரிக்க மாட்டோம். ஒரு பயன்பாடு நுகர்வோரை வெளிப்புற வலைத்தளத்திற்கு அழைத்துச் சென்று உண்மையான பணம் அல்லது பரிசுகளை வெல்லப் பணம் செலுத்தும் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கிறது, இது எங்கள் கொள்கைகளை மீறுவதாகும்." இருப்பினும், அந்த வலைப்பதிவில் Paytm என்று குறிப்பிடப்படவில்லை.
இதனையடுத்து கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து பயன்பாடு நீக்கப்பட்டிருந்தாலும், பீன்டெக் நிறுவனமான Paytm அதன் பயனர்களைப் பீதியடைய வேண்டாம் என்றும் அவர்களின் பணம் "முற்றிலும் பாதுகாப்பானது" என்றும் கேட்டுக்கொண்டது.
இந்நிலையில், கூகுள் ப்ளே ஸ்டோரில் நீக்கப்பட்ட பேடிஎம் செயலி மீண்டும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது அனைவரும் கூகுள் ப்ளே ஸ்டோரில் டவுன்லோடு செய்யும் வகையில் Paytm இடம்பெற்றுள்ளது.