இந்தியா

“வெவ்வேறு விதமாகப் பேசும் அமைச்சர்கள் : மோடியின் கீழ் ஒரு அரசா? இரண்டு அரசுகளா?” - ப.சிதம்பரம் கேள்வி!

பிரதமர் மோடி தலைமையில் நாட்டில் 2 அரசுகள் செயல்படுகிறதா என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

“வெவ்வேறு விதமாகப் பேசும் அமைச்சர்கள் : மோடியின் கீழ் ஒரு அரசா? இரண்டு அரசுகளா?” - ப.சிதம்பரம் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பிரதமர் மோடியின் தலைமையில் நாட்டில் இரு அரசுகள் செயல்படுகின்றனவா என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி மீட்சி குறித்து மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியனும், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸும் இரு வேறு முரண்பட்ட கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

அதேபோல, கடந்த 6 மாதங்களில் இந்திய எல்லையில் சீன ஊடுருவல் இல்லை என உள்துறை இணை அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஆனால், எல்லையில் அமைதி திரும்ப, ஊடுருவல் பகுதிகளில் இருந்து சீனா பின்வாங்க வேண்டும் என பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் எச்சரித்து வருகின்றனர்.

இவற்றை சுட்டிக்காட்டி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ப.சிதம்பரம், “பொருளாதார வளர்ச்சி படிப்படியாக நீண்டகாலத்தில்தான் இருக்கும் என்று தெரிவித்தார். ஆனால், தலைமைப் பொருளாதார ஆலோசகர், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி நிலையிலிருந்து விரைவாக வளர்ச்சியை நோக்கி மேலே எழும்பும் என்று ஒவ்வொரு நேர்காணலிலும் தெரிவிக்கிறார்.

சீனா-இந்தியா விவகாரத்திலும் ஒவ்வொரு அமைச்சரும் வெவ்வேறு கருத்துகளைத் தெரிவிக்கின்றனர். உள்துறை இணையமைச்சர் நித்யானந்தராய் மாநிலங்களவையில் அளித்த பதிலில், கடந்த 6 மாதங்களாக இந்தியா-சீனா எல்லையில் எந்தவிதமான ஊடுருவல்களும் நடக்கவில்லை என்று தெரிவித்தார்.

ஆனால், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பேசுகையில், எல்லையில் சீனாவின் அத்துமீறலைக் கண்டிக்கிறார்கள். பிரதமர் மோடியின் கீழ் ஒரு அரசாங்கம் செயல்படுகிறதா அல்லது இரு அரசாங்கங்கள் செயல்படுகிறதா என ஆச்சரியம் ஏற்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories