இந்தியா

“சீனா ஆக்கிரமித்த நம் நிலத்தை மீட்பது எப்போது? அல்லது இதுவும் கடவுள் செயல்தானா?” - ராகுல் காந்தி கேள்வி!

தொடர்ந்து இந்திய சீன எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.

“சீனா ஆக்கிரமித்த நம் நிலத்தை மீட்பது எப்போது? அல்லது இதுவும் கடவுள் செயல்தானா?” - ராகுல் காந்தி கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இந்தியா சீனா எல்லை பிரச்சினையில் மத்திய அரசின் செயல்பாடுகளை தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் ராகுல் காந்தி தற்போது மற்றொரு கேள்வியை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் எழுப்பியுள்ளார்.

சில மாதங்களாகவே இந்திய சீன எல்லையான லடாக்கில் இந்திய மற்றும் சீன இராணுவங்களுக்கு இடையே உரசல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஓரிருமுறை இந்த உரசல் மோதலாக மாறி வன்முறை வெடித்து இரு தரப்பிலும் உயிர்பலிகளும் ஏற்பட்டன.

இந்நிலையில், லடாக் எல்லையில் இந்தியாவுக்கு சொந்தமான இடத்தை சீனா ஆக்கிரமித்துள்ளதாக தொடர்ந்து செய்திகள் வெளிவந்துகொண்டே இருக்கின்றன. செயற்கைக்கோள் படங்களும் அவற்றை உறுதிப்படுத்தி இருக்கின்றன.

இதுகுறித்து தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வரும் ராகுல் காந்தி, தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “சீனர்கள் நம்முடைய நிலத்தை எடுத்துக்கொண்டுள்ளார்கள். நம் இந்திய அரசு சரியாக எப்போது அதை திரும்ப எடுத்துக்கொள்ள இருக்கிறது? அல்லது அதையும் கடவுளின் செயல் பார்த்துக்கொள்ளும் என விட்டுவிடப்போகிறோமா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக நிர்மலா சீதாராமன் கோவிட் 19 பெருந்தொற்று மீதான நடவடிக்கைகளுக்கும், இந்திய பொருளாதார வீழ்ச்சிக்கும் காரணம் கடவுளின் செயல் என கருத்து தெரிவித்திருந்தார்.

அதைச் சுட்டிக்காட்டும் வண்ணமே ராகுல் காந்தி இந்தப் பதிவை இட்டுள்ளார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி உடன் இந்திய சீன எல்லை பிரச்சனையை சுமூகமாக முடித்துக்கொள்வது சம்பந்தமாக நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories