இந்தியா

36 லட்சத்தை கடந்தது கொரோனா.. ஒரே நாளில் 78,512 பேருக்கு வைரஸ் தொற்று.. நீளும் மோடி அரசின் சாதனை பட்டியல்!

ஒரே நாளில் நாட்டில் 971 கொரோனா பாதிப்பால் உயிரிழந்திருக்கிறார்கள்.

36 லட்சத்தை கடந்தது கொரோனா.. ஒரே நாளில் 78,512 பேருக்கு வைரஸ் தொற்று.. நீளும் மோடி அரசின் சாதனை பட்டியல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் வேளையில் மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை அளித்து வருகிறது. கோடான கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் இப்படியான தளர்வுகளை வழங்கி வருவதால் வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மேன்மேலும் அதிகரித்து உலகளவில் அதிக பாதிப்புகளை கொண்ட அமெரிக்காவையும் மிஞ்சும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 36 லட்சத்தை தாண்டியுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் நாடு முழுவதும் 36 லட்சத்து 21 ஆயிரத்து 245 பேருக்கு இதுகாறும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது.

36 லட்சத்தை கடந்தது கொரோனா.. ஒரே நாளில் 78,512 பேருக்கு வைரஸ் தொற்று.. நீளும் மோடி அரசின் சாதனை பட்டியல்!

அதில், 27 லட்சத்து 74 ஆயிரத்து 801 பேர் குணமடைந்திருப்பதாக கூறப்படாலும் 64 ஆயிரத்து 469 பேர் கொரோனாவுக்கு பலியாகியிருக்கிறார்கள். ஆகவே தற்போது 7 லட்சத்து 81 ஆயிரத்து 975 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் 8 ஆயிரத்து 944 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 78 ஆயிரத்து 512 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மேலும் 971 பேர் பலியாகியும், 60 ஆயிரத்து 868 பேர் டிஸ்சார்ஜ் ஆகியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக பரவலே இல்லையென கூறிக்கொண்டிருக்கும் மோடி அரசுக்கு தினந்தோறும் 70 ஆயிரத்துக்கும் மேலான பாதிப்புகள் எவ்வாறு பதிவாகிறது என்பதன் அடிப்படை புரிதல் கூடவா இல்லையேன பல்வேறு தரப்பினர் சாடி வருகின்றனர். பல கட்ட ஊரடங்கு அறிவித்தும் அதனை பயன்படுத்தி நோய் பரவலை கட்டுப்படுத்த தவறிய மத்திய மோடி அரசு தற்போது சாமானிய மக்களை அன்றாடம் கொரோனா அச்சத்துடன் வாழ வைத்து வருகிறது எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

banner

Related Stories

Related Stories