இந்தியா

இந்தியாவில் ‘கொரோனா க்ளஸ்டர்’ ஆகும் அலுவலகங்கள் : வழிமுறைகளை பட்டியலிட்ட ஐ.சி.எம்.ஆர் அதிகாரி!

நாட்டில் கடந்த ஒரு மாதத்தில் அலுவலகங்கள் மூலம் கொரோனா பரவுவது அதிகரித்துள்ளது என ஐ.சி.எம்.ஆர் அதிகாரி கூறியுள்ளார்.

இந்தியாவில் ‘கொரோனா க்ளஸ்டர்’ ஆகும் அலுவலகங்கள் : வழிமுறைகளை பட்டியலிட்ட ஐ.சி.எம்.ஆர் அதிகாரி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பல்லாயிரக்கணக்கில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி கடந்த 24 மணிநேரத்தில் மட்டுமே கொரோனா தொற்றால் 75,760 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதனையடுத்து மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,314,953 ஆக அதிகரித்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் செப்டம்பர் மாதத்திற்குள் உலகளவில் கொரோனாவுக்கு அதிகளவில் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடிக்கும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.

நிலைமை இவ்வாறு இருக்கையில், மத்திய மோடி அரசோ மக்களுக்கான நிவாரணங்களை நிதியாக அளிக்காமல் கொரோனா பரவலுக்கு விதை தூவும் வகையில் அன்லாக் செயல்முறைகள் மூலம் புது புது தளர்வுகளை அளித்து வருகிறது. இதனால் வாழ்வாதாரத்தை தேடி மக்கள் பொது வெளியில் கூடுவது அதிகரித்துள்ளது.

இந்தியாவில் ‘கொரோனா க்ளஸ்டர்’ ஆகும் அலுவலகங்கள் : வழிமுறைகளை பட்டியலிட்ட ஐ.சி.எம்.ஆர் அதிகாரி!

அலுவலகங்களிலும் 50 சதவிகிதத்துக்கும் அதிகமான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதன் காரணமாக இந்தியாவில் பணி இடத்தின் மூலம் கொரோனா பரவுவது அதிகரித்துள்ளது என ஐ.சி.எம்.ஆர் அதிகாரி பிரப்தீப் கவுர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், கடந்த மாதங்களில் பணியிடங்கள் மூலம் புது கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது. ஆகவே அலுவலகங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றில் பாதுகாப்பாக இருப்பதற்கு சில வழிமுறைகள் தேவைப்படுகிறது.

1) பணியாளர்கள் அனைவரும் 100 சதவிகிதம் மாஸ்க் அணிவதை கட்டாயப்படுத்த வேண்டும்.

2) தனிமனித இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

3) அலுவலகங்களின் பல்வேறு இடங்களில் கிருமி நாசினி பயன்படுத்தும் வகையில் சானிடைசர்ஸ் வைத்திருக்க வேண்டும்.

4) கேன்டீன்களில் குறைந்த அளவிலான ஆட்களையே அனுமதிக்க வேண்டும்.

5) கோவிட் கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வேண்டும்.

6) கொரோனா அறிகுறி உடையவர்களை கண்டறிந்து அலுவலகங்களுக்கு வரவேண்டாம் என அறிவுறுத்த வேண்டும்.

7) அதிகளவிலான அறிகுறி உடையவர்களை உடனடியாக கொரோனா சோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

8) சம்பள பிடித்தம் செய்யாமல் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வதை அனுமதிக்க வேண்டும்.

9) அலுவலகங்களுக்குள் உள் அரங்க ஆலோசனைக் கூட்டங்களை கூட்ட வேண்டாம்.

10) உணவருந்துவதற்கு டீ, காஃபி குடிப்பதற்கும் அதிகளவில் பணியாளர்கள் கூடக் கூடாது.

இவ்வாறு பிரப்தீப் கவுர் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories