இந்தியா

இந்தி தெரியாதெனில் அவமதிக்கப்படுவதை இன்னும் எத்தனை நாள் பொறுத்துக் கொள்ள போகிறோம்? - கனிமொழி எம்.பி

இந்தி தெரியாதெனில் 
அவமதிக்கப்படுவதை இன்னும் எத்தனை நாள் பொறுத்துக் கொள்ள போகிறோம்? - கனிமொழி எம்.பி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்திய ஆயுஷ் அமைச்சகம் சார்பில் 3 நாள் ஆன்லைன் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. அதில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பயிற்சி மருததுவர்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் இந்தி மட்டுமே பிரதானமாக பயன்படுத்தியது பங்கேற்றவர்கள் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதன் உச்சமாக, ஆயுஷ் அமைச்சக செயலாளர்,

ராஜேஷ் கொட்டேச்சா, இந்தி தெரியாதவர்கள் கூட்டத்தில் இருந்து வெளியேறி விடலாம் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தி மு.க எம்பி கனிமொழி வெளியிட்ட டிவிட்டர் பதிவில் "

மத்திய ஆயுஷ் அமைச்சக செயலர் வைத்யா ராஜேஷ் கொட்டேச்சா, அமைச்சகத்தின் பயிற்சி வகுப்பில்,இந்தி தெரியாதவர்கள் வெளியேறலாம் என்று சொல்லியிருப்பது மத்திய அரசின் இந்தி திணிப்பு கொள்கையை அப்படியே பிரதிபலிப்பதாக இருக்கிறது.இது கண்டிக்கத்தக்கது.மத்திய அரசு, உடனடியாக அந்த செயலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இன்னும் எத்தனை நாள் இந்தி தெரியாது என்றால் அவமதிக்க படுவதை, பொறுத்துக்கொள்ளப் போகிறோம் ?" என்று ஆதங்கத்தை பதிவு செய்துள்ளார்.

banner

Related Stories

Related Stories