இந்தியா

191 பேர் பயணித்த வந்தே பாரத் விமானம் தரையிறங்கியபோது கோர விபத்து - விமானி பலியானதாக தகவல்!

191 பேர் பயணித்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கேரளாவில் பயங்கர விபத்தில் சிக்கியது.

191 பேர் பயணித்த வந்தே பாரத் விமானம் தரையிறங்கியபோது கோர விபத்து - விமானி பலியானதாக தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

துபாயிலிருந்து 174 பயணிகள் உட்பட 191 பேருடன் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், கோழிக்கோட்டில் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் தமிழகத்தின் கூடலூரைச் சேர்ந்த மூன்று பேரும் பயணித்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கால் வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் மத்திய அரசின் ‘வந்தே பாரத்’ திட்டத்தின் மூலம் இந்தியா அழைத்து வரப்படுகின்றனர். அதன்படி, துபாயில் சிக்கி தவித்த இந்தியர்கள் 174 பேர், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கேரள மாநிலத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

இந்த விமானம் இன்று இரவு 7.45 மணியளவில் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கும் நேரத்தில் விபத்துக்குள்ளானது. ஓடுதளம் அருகே வந்தபோது, 35 அடி உயரத்தில் இருந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானம் இரண்டாக உடைந்து முன்பகுதி சிதைந்துள்ளது.

மழை காரணமாக விபத்து நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விமான சக்கரத்தில் பழுது ஏற்பட்டதாகவும், இதனால் ஓடுதளத்திலிருந்து விலகி விபத்துக்குள்ளானதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் விமானி பலியானதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. விபத்தில் எவ்வளவு பேர் பலியானார்கள் என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை. மீட்புப் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.

banner

Related Stories

Related Stories