கொரோனா ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தி மோடி அரசு, சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை விதிகள் -2020” என்று வரைவு அறிவிக்கையில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.
மோடி அரசு கொண்டுவந்துள்ள இந்த திருத்தங்கள், வளர்ச்சியின் பெயரால் அழிவுப் பாதைக்கு அடித்தளம் அமைக்கும் வகையில் இருக்கின்றன சூழலியல் ஆர்வலர்கள், பொதுமக்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கங்கள் என பலரும் எதிர்க்கத் துவங்கியுள்ளனர்.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை 10 மொழிகளில் வெளியிட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத மத்திய அரசு. இதுவரை மூன்று மொழிகளில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது என தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது.
சுற்றுச்சூழல் வரைவு அறிக்கையை அனைத்து மாநில மக்களும் புரிந்து கொள்ளும் விதமாக ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள ஆங்கிலம், இந்தி தவிற குறைந்தது 10 மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிட வேண்டும் என்று ஜூன் 30 ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. கருத்துக் கேட்பு தேதியையும் ஆகஸ்ட் 11 வரை நீட்டித்து உத்தரவிட்டது.
ஆனால், இந்த உத்தரவை முழுமையாக மத்திய அரசு இன்னும் செயல்படுத்தவில்லை. மராத்தி, ஒடியா, நேபாளி ஆகிய மூன்று மொழிகளில் மட்டுமே வெளியிட்டிருப்பது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.
இதனிடையே, அனைத்து மொழிகளிலும் சுற்றுச்சூழல் வரைவு அறிக்கையை வெளியிட்டு அதன் பின்னர் போதிய அவகாசம் வழங்கி கருத்து கேட்பு நடத்த வேண்டும். அது வரை சுற்றுச்சூழல் தாக்க அறிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு 5ம் தேதி விசாரணக்கு வருகிறது.