ஆந்திராவில் மதுவகைகள் அதிக விலைக்கு விற்கப்படுவதால் மதுவிற்கு அடிமையானவர்கள் மது வாங்கமுடியாத சூழலில் மதுபோதைக்காக பல விபரீத முடிவுகளை கையில் எடுத்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள குரிசேடு பகுதியில் தினசரி கூலி வேலைக்குச் சொல்வோர், தூய்மைப் பணியாளர்கள் என அதிகம் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியைச் சேர்ந்த சில தொழிலாளர்கள் நேற்றைய தினம் மது வாங்க போதிய அளவில் பணம் இல்லாததால் கள்ளச்சாரயத்தை வாங்கி வந்துள்ளனர்.
அப்போது சாராயத்துடன் ஸ்பிரிட், சானிடைசரை கலந்தால் போதை இன்னும் அதிகாகும் என எண்ணி அனைத்தையும் ஒன்றாகக் கலந்து குடித்துள்ளனர். இதனையடுத்து கள்ளச்சாரயம் மற்றும் சானிடைசர் கலந்த சாராயம் என குடித்த 10 பேருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உடல்நலம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட9 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.