இந்தியா

“கல்வியை கார்ப்பரேட் சந்தையாக்கும் பா.ஜ.க அரசு” - தேசிய கல்விக் கொள்கைக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

பா.ஜ.க அரசு கல்வியை கார்ப்பரேட் சந்தையாக்கத் திட்டமிடுவதாக தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

“கல்வியை கார்ப்பரேட் சந்தையாக்கும் பா.ஜ.க அரசு” - தேசிய கல்விக் கொள்கைக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள புதிய கல்விக் கொள்கையின் பெரும்பான்மையான திட்டங்கள் இந்தி - சமஸ்கிருத மொழிகளைத் திணிக்கும் விதமாகவும், ஏழை எளிய மாணவர்களிடமிருந்து கல்வியைப் பறிக்கும் விதமாகவும் இருப்பதாக எதிர்க்கட்சிகளும், கல்வியாளர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு கல்வியை கார்ப்பரேட் சந்தையாக்கத் திட்டமிடுவதாக தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில், "புதிய கல்விக்கொள்கை என்பதன் மூலம் மாநில உரிமைகள், சமூக நீதி போன்றவற்றின் மீது மீண்டுமொரு தாக்குதலை நடத்தியுள்ளது மத்திய அரசு. யாரையும் கலந்தாலோசிக்காமல் கொள்கைகளை எல்லாம் வலியக் கோத்து உருவாக்கப்பட்டுள்ள புதிய கல்விக்கொள்கை நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்று.

கல்வியை மாநிலப்பட்டியலுக்கு கொண்டு வருவதற்கு பதிலாக, ஒரே பாடத்திட்டம், தேர்வுமுறை மற்றும் கட்டமைப்பினை உருவாக்கி தேசியக்கல்வி ஆணையம் அவற்றை கண்காணிக்கும் என புதிய கல்விக்கொள்கை கூறுகிறது. இது மாநிலங்களின் கல்வி அதிகாரங்களை பறித்து மாநிலத்தை வெறும் வரி கட்டும் அமைப்பாக மாற்றும் முயற்சியே.

மருத்துவம் படிக்க ‘நீட்’ கொண்டு வந்து அனிதாக்களை பலியிட்டது போதாது என கலை, அறிவியல் படிப்புக்கும் நுழைவுத்தேர்வு கட்டாயம் என்பதும், பள்ளியிலேயே தொழிற்கல்வி என்பதும், கிராமப்புற, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு எதிராக தேங்கியுள்ள ஈராயிரமாண்டு வன்மத்தையே காட்டுகிறது.

ஆத்ம நிர்பார், தற்சார்பு என்றெல்லாம் கலர்கலராக கதை விட்டுவிட்டு வெளிநாட்டு நிறுவனங்கள் கல்வியில் முதலீடு செய்யலாம் என புதிய கல்விக்கொள்கையில் கூறியிருப்பது ஏன்? இந்தியாவை உலக கார்ப்பரேட்களின் கல்விச்சந்தையாக்கி தனியாருக்குத் திறந்துவிடும் இந்த நோக்கம் கண்டிக்கத்தக்கது.

ஆத்ம நிர்பார், தற்சார்பு என்றெல்லாம் ‘கலர்கலராக’ கதை விட்டுவிட்டு வெளிநாட்டு நிறுவனங்கள் கல்வியில் முதலீடு செய்யலாம் என புதிய கல்விக்கொள்கையில் கூறியிருப்பது ஏன்? இந்தியாவை உலக கார்ப்பரேட்களின் கல்விச்சந்தையாக்கி தனியாருக்குத் திறந்துவிடும் இந்த நோக்கம் கண்டிக்கத்தக்கது." எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.

banner

Related Stories

Related Stories