இந்தியா

மகிழ்மதி தேசத்தின் பிதாமகனுக்கு கொரோனா தொற்று : குடும்பத்துடன் தனிமைப்படுத்திக் கொண்ட ‘பாகுபலி’ ராஜமெளலி!

பாகுபலி பட இயக்குநர் ராஜமெளலிக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார்.

மகிழ்மதி தேசத்தின் பிதாமகனுக்கு கொரோனா தொற்று : குடும்பத்துடன் தனிமைப்படுத்திக் கொண்ட ‘பாகுபலி’ ராஜமெளலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கொரோனா பாதிப்பு இந்தியாவில் பெரும் அச்சுறுதலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பாதிப்பு நடவடிக்கையில் அரசு தடுப்பு நடடிக்கைகள் மேற்கொண்டும் பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறையவில்லை.

இந்நிலையில், பொதுமக்கள் மக்கள் தொடங்கி, முக்கிய அரசியல் கட்சித் தலைவரகள், சினிமா துறையைச் சேர்ந்த ஆளுமைகளும் என பலருக்கும் கொரோனா தொற்றின் பாதிப்புகளை சந்தித்துத் வருகின்றனர்.

குறிப்பாக முன்னதாக நடிகை ஐஸ்வர்யா ராய், விஷால் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். இந்நிலையில், பாகுபலி இயக்குநர் ராஜமெளலிக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, ராஜமெளலி மற்றும் அவரது குடும்பத்தினர் தற்போது தனிமைப்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக ராஜமெளலி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ சில தினங்களாகவே எனக்கும் என் குடும்பத்தினருக்கும் லேசான காய்ச்சல் ஏற்பட்டது. பின்னர் அது தானாகவே சரியாகிவிட்டாலும், குடும்பத்தோடு பரிசோதனை செய்து கொண்டோம்.

அதன்படி, இன்று பரிசோதனை முடிவில் மிதமான கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, மருத்துவர்களின் அறிவுரைப்படி நாங்கள் எங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம்.

எந்த அறிகுறியும் இல்லாமல் நாங்கள் நன்றாக உள்ளோம். ஆனால், அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றுகிறோம். நோய் எதிர்ப்பு சக்தி உருவானதும், எங்கள் பிளாஸ்மாவை தானம் செய்து ஆன்டிபாடிகளை உருவாக்க காத்திருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories