இந்தியா

கடுமையான முறைகேடுகளுக்கு உள்ளான ரஃபேல் போர் விமானங்கள் இன்று இந்தியா வந்தடைந்தன!

ரபேல் போர் விமானங்கள் இன்று இந்தியா வந்து சேருகின்றன.

கடுமையான முறைகேடுகளுக்கு உள்ளான  ரஃபேல் போர் விமானங்கள் இன்று இந்தியா வந்தடைந்தன!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இந்திய விமானப்படைக்காக வாங்கப்பட்டிருக்கும் ரஃபேல் போர் விமானங்கள் இன்று இந்தியா வந்து சேர்ந்தன.

ஐந்து ஜெட் விமானங்களும் தெற்கு பிரான்சின் போர்டியாக்ஸில் உள்ள மெரிக்னாக் விமான நிலையத்திலிருந்து திங்கள்கிழமை புறப்பட்டன. இந்த விமானங்களை இந்திய விமானப்படை விமானிகள் ஓட்டி வருகின்றனர்.

கடுமையான முறைகேடுகளுக்கு உள்ளான  ரஃபேல் போர் விமானங்கள் இன்று இந்தியா வந்தடைந்தன!

7000 கிலோமீட்டர்களை வான்வழியாக கடந்து வந்த இந்த விமானங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அல் தஃப்ராவில் நிறுத்தப்பட்டன. அங்கு பிரான்ஸ் நாட்டுக்கு விமானத்தளம் ஒன்றுள்ளது. மேலும் இந்த விமானங்களுடன் பிரான்ஸுக்குச் சொந்தமான, நடுவானில் எரிபொருள் நிரப்பும் இரண்டு விமானங்களும் வருகின்றன.

செவ்வாயன்று 30,000 அடி உயரத்தில் விமானம் ஒன்றிலிருந்து ரஃபேலுக்கு எரிபொருள் நிரப்பப்படும் காட்சிகள் இந்திய விமானப்படையால் வெளியிடப்பட்டன.

கடுமையான முறைகேடுகளுக்கு உள்ளான  ரஃபேல் போர் விமானங்கள் இன்று இந்தியா வந்தடைந்தன!

இந்நிலையில் இந்த ஐந்து ரஃபேல் போர் விமானங்களின் முதல் குழு இன்று (ஜூலை 29) இந்தியாவில் தரையிறங்கும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி ஹரியானாவின் அம்பாலாவில் உள்ள இந்திய விமானப்படையில் இந்த ஐந்து ஜெட் விமானங்களும் முறையாகச் சேர்க்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அம்பாலா விமான நிலையம் என்பது பாகிஸ்தான் எல்லையிலிருந்து 200 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இதனால் அங்கு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

விமானம் தரையிறங்கும் போது படப்பிடிப்பு அல்லது புகைப்படம் எடுப்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விமானத் தளத்தின் மூன்று கி.மீ சுற்றளவில் மக்கள் தனியார் ட்ரோன்களை பறக்கவிடவும் அம்பாலா மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.

இந்த ஐந்து ரபேல் விமானங்களும் இந்திய விமானப்படையில் 17வது ஸ்குவாட்ரனான கோல்டன் ஸ்குவாட்ரனில் சேர்த்துக்கொள்ளப்படுகின்றன.

முந்தைய மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக இந்த ரபேல் விமானங்கள் வாங்கியதில் பிரதமர் அலுவலகம் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories