பப்ஜி கேமை பாதுகாப்புக் காரணங்களுக்காக தடை செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியான நிலையில், பப்ஜி மீம்கள் வைரலாகி வருகின்றன.
இந்தியா, சீனா இடையேயான எல்லைப் பிரச்சனையை தொடர்ந்து சீனாவின் 59 செயலிகளைப் பாதுகாப்பு குறைபாடுகளைக் காரணம் காட்டி மத்திய அரசு தடை செய்தது.
இந்நிலையில், மேலும் 275 செயலிகள் பட்டியலிடப்பட்டு, அவற்றின் தகவல் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விசாரணை நடத்தி வரும் மத்திய அரசு, அவற்றையும் தடை விதிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து பப்ஜி கேம் தடை செய்யப்படலாம் என்ற இப்போதே பப்ஜி பிரியர்கள் கவலை கொள்ளத் தொடங்கியுள்ளனர். இந்தியாவில் கோடிக்கணக்கானோரின் விருப்பமான கேமாக பப்ஜி இருந்துவருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பப்ஜி தடை குறித்த மீம்கள் சமூக வலைதளங்களில் வலம்வரத் தொடங்கியுள்ளன.
பப்ஜி விளையாட்டில் வீரர்கள் வரிசையாக நிற்பது போல உருவாக்கி, “மத்திய அரசின் முடிவை எதிர்த்து பேரணி நடத்துவதாக” மீம்களை வெளிட்டுள்ளனர். இதுகுறித்த மீம்கள் தற்போது வைரலாகி வருகின்றன.