இந்தியா

கடன் வாங்க சென்ற டீக்கடைக்காரரிடம் ரூ.51 கோடி கடனை கட்ட சொன்ன வங்கி நிர்வாகம் : ஹரியானாவில் நடந்த கொடுமை!

ஹரியானாவில் தனது பெயரில் ரூ.50 கோடி வங்கிக் கடன் இருப்பதைக் கண்டு டீக்கடைக்காரர் ஒருவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

கடன் வாங்க சென்ற டீக்கடைக்காரரிடம் ரூ.51 கோடி கடனை கட்ட சொன்ன வங்கி நிர்வாகம் : ஹரியானாவில் நடந்த கொடுமை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஹரியானா மாநிலம் குருஷேத்ரா பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் அப்பகுதியில் சிறிய டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். கொரோனா ஊரடங்கால் வாழ்வாதம் இழந்ததால் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் ராஜ்குமார் சிக்கியுள்ளார்.

முன்னதாக கடந்த 2015ம் ஆண்டு முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.20 ஆயிரம் கடன் வாங்கி டீ வியாபாரத்தை தொடங்கியுள்ளார். அதில் பாதி தொகை செலுத்தவேண்டியுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் தரளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருப்பதால் வங்கியில் கடன் பெற்று தொழில் செய்ய ராஜ்குமார் முடிவெடித்துள்ளார்.

இதனால் அவர் அங்கிருந்த வங்கி ஒன்றிற்குச் சென்று 50 ஆயிரம் ரூபாய் கடன் கேட்டுள்ளார். அவரது வங்கி விவரங்களைப் பார்த்த மேலாளர், கடன் தர முடியாது என்று கூறியுள்ளார். இதற்கான காரணம் கேட்ட போது தான், அதிர்ச்சியூட்டும் விஷயம் தெரியவந்துள்ளது.

அதாவது ராஜ்குமார் வங்கிக் கணக்கில் ஏற்கெனவே 50 கோடியே 76 லட்சம் ரூபாய் கடன் பெறப்பட்டுள்ளது. இதையே இன்னும் அடைக்காத போது, அதற்குள் புதிதாக அடுத்தக் கடன் எப்படி தர முடியும் என்று வங்கி மேலாளர் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சியில் செய்வது அறியாது ராஜ்குமார் திகைத்து போய்நின்றுள்ளார்.

பின்னர், எதன் அடிப்படையில் கடன் கொடுக்கப்பட்டதுஎன ராஜ்குமார் கேட்டபோது, அந்த கடன் விவரத்தில் மாதந்தோறும் ஏதேனும் ஒரு கடன் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கிசான் கிரெடிட், ஆட்டோ, டிராக்டர் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் பட்டியல் போடப்பட்டுள்ளன.

இதனைக்கேட்டதும் தனது பெயரில் மோசடி நடந்திருப்பதை உணர்ந்த ராஜ்குமார், இதுதொடர்பாக புகாரை வங்கி அதிகாரிகளிடம் அளித்துள்ளார். இதனையடுத்து வங்கி நிர்வாகம் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது நிச்சயம் தொழில்நுட்ப கோளாறாகத் தான் இருக்க முடியும் என்று ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் ஹரியானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories