இந்தியா

“பொருளாதார வீழ்ச்சி; இந்தியாவின் கடன் மொத்த GDPயில் 87.6% வரை அதிகரிக்கும்”: பொருளாதார வல்லுநர் அறிக்கை!

தற்போதைய ஜி.டி.பி வளர்ச்சி குறைவால் மட்டும், இந்தியாவின் கடன் 4 சதவிகிதம் வரை அதிகரிக்கலாம் என்று சவுமியா காந்தி கோஷ் கூறியுள்ளார்.

“பொருளாதார வீழ்ச்சி; இந்தியாவின் கடன் மொத்த GDPயில் 87.6% வரை அதிகரிக்கும்”: பொருளாதார வல்லுநர் அறிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியாவின் கடன், மொத்த ஜி.டி.பி-யில், 87.6 சதவிகிதம் என்ற அளவிற்கு அதிகரிக்கும் என்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் முதன்மை பொருளாதார ஆலோசகரான முனைவர் சவுமியா காந்தி கோஷ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக முனைவர் சவுமியா காந்தி கோஷ் ‘ஈகோவ்ராப்’ (Ecowrap) என்ற தலைப்பில் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “22020 - 21ம் நிதியாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில், கடன் தொகை 87.6 சதவிகிதத்தை எட்டலாம்.

அதாவது, கடந்த 2011 - 12 நிதி ஆண்டில் 58.8 லட்சம் கோடி ரூபாயாகவும் (GDP ratio67.4%), 2019 - 20 நிதியாண்டில் 146.9 லட்சம் கோடி ரூபாயாகவும் (GDP ratio 72.2%) இருக்கும் கடன் 2020-21 நிதியாண்டில் 170 லட்சம் கோடி ரூபாயாக உயரும்; அப்படி உயர்ந்தால், அந்த கடன்தொகை, இந்தியாவின் மொத்த ஜி.டி.பியில் 87.6 சதவிகிதமாக இருக்கும்.

“பொருளாதார வீழ்ச்சி; இந்தியாவின் கடன் மொத்த GDPயில் 87.6% வரை அதிகரிக்கும்”: பொருளாதார வல்லுநர் அறிக்கை!

இதேபோல வெளிநாட்டுக் கடன் 6.8 லட்சம் கோடி ரூபாயாக (இந்திய ஜி.டி.பியில் 3.5 சதவிகிதம்) அதிகரிக்கலாம்” என கணிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்தியை விட, கடன் குறைவாக இருந்தால் மட்டுமே, அந்த நாட்டு பொருளாதாரம் மேற்கொண்டு எந்த கடனும் வாங்காமல், பொருட்களை உற்பத்திசெய்யவோ, பொருட்கள் & சேவைகளை விற்று, கடன்களை திருப்பிச் செலுத்தவோ முடியும்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, இந்தியாவின் ஜிடிபி வீழ்ச்சியால் கடன் தொகை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போதைய ஜி.டி.பி வளர்ச்சி குறைவால் மட்டும், இந்தியாவின் கடன் 4 சதவிகிதம் வரை அதிகரிக்கலாம் என்று சவுமியா காந்தி கோஷ் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories