கொரோனா பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட நாள் முதலே, இந்தியாவில் செயல்பட்டு வரும் நிறுவனங்கள் ஆட்குறைப்பு, சம்பளகுறைப்பு, பணி நீக்க நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் லட்சக்கணக்கானோர் தங்களின் வேலை மற்றும் வருவாயை இழந்து வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், நாஸ்காம் (Nasscom) மற்றும் சிக்கி (SCIKEY) ஆகிய நிறுவனங்கள் இதுதொடர்பான ஆய்வை நடத்தி அறிக்கை வெளியாகியுள்ளது.
இந்த அறிக்கையில், “கொரோனாவுக்கு பிந்தைய வணிகச் சூழல் காரணமாக, ஆட்டோமேஷன், டிஜிட்டல், கிக் எனப்படும் தற்காலிக தொழில்சார் பொருளாதாரத்தின் கீழ் இருக்கும் உற்பத்தித் துறையில் உள்ள சுமார் 5 முதல் 10 சதவிகித ஊழியர்கள் அதிக வாய்ப்புகளை பெறுவர் என்றாலும், பரவலாக 10 முதல் 20 சதவிகிதம் வரைவேலை குறைப்புகளும் இருக்கலாம்” என்று ஃபிக்கிகூறியுள்ளது.
குறிப்பாக, ஆட்டோமொபைல் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் 10 முதல் 15 சதவிகிதம் வேலை குறைப்புகள் இருக்கலாம். ஜவுளி மற்றும் ஆடைத்துறைகளில் 15 முதல் 20 சதவிகிதம் வரை ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படலாம்” என்று ஃபிக்கி குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, ஜூன் காலாண்டில் புதிய வேலை வாய்ப்புகள் 6.73% குறைந்துள்ளதாக வர்த்தகத் தளமான ‘சிக்கி’ கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.