வெள்ளத்தைக் கட்டுப்படுத்த உத்தர பிரதேச மாநிலம் நீர் வளத்துறை அமைச்சர் கூறிய வழி முறை, எல்லோரையும் வாய்பிளக்க வைத்துள்ளது.
கடந்த ஒருவாரமாக உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்தது.
ஆறுகளை வெள்ள கண்காணிப்பு பணிகள் குறித்து அரசு அதிகாரிகளிடம் பேசிய அமைச்சர் மஹேந்திர சிங், வெள்ளம் வருவதை தடுக்க தினமும் பூஜை நடத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். தினமும் மலர் தூவி பிரார்த்திக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இது வழக்கமாக இந்து மதத்தில் பின்பற்றப்படும் முறைதான் என்று அதிகாரிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
அரசு என்பது எந்தவித மதச் சாயலும் இல்லாமல் இருக்க வேண்டும். இந்து மதத்தை மற்றும் பின்பற்றும் அரசு எப்படி அனைத்து மதத்தைச் சேர்ந்த மக்களுக்கான அரசாக இருக்க முடியும்?. மேலும் பூஜை, மூட நம்பிக்கைகளை பின்பற்றுவதை விட்டுவிட்டு வெள்ளத் தடுப்புக்கு தேவையான நடவடிக்கைகள் எடுப்பதே மக்களை காக்கும் என்கின்றனர் சூழலியல் ஆர்வலர்கள்.