இந்தியா

விதிகளை மதிக்காமல் பைக் ஓட்டிய தலைமை நீதிபதி : 50 லட்சம் மதிப்பிலான அந்த பைக் யாருடையது தெரியுமா ?

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஏஸ்.ஏ.பாப்டே ஹார்லி டேவிட்சன் பைக்கில் இருப்பது போன்று வெளியான புகைப்படம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விதிகளை மதிக்காமல் பைக் ஓட்டிய தலைமை நீதிபதி : 50 லட்சம் மதிப்பிலான அந்த பைக் யாருடையது தெரியுமா ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஏஸ்.ஏ.பாப்டே ஹார்லி டேவிட்சன் பைக்கில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்று தற்போது ட்விட்டரில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசன் பகிர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக பிரசாந்த் பூசன் வெளியிடுள்ள பதிவில், “நாக்பூர் ராஜ் பவனில் பா.ஜ.க தலைவருக்கு சொந்தமான 50 லட்சம் மதிப்புடையை பைக்கில் முகமூடி அல்லது ஹெல்மெட் இல்லாமல் சி.ஜே.ஐ பாப்டே சவாரி செய்கிறார். ஊரடங்கு நேரத்தில் உச்சநீதிமன்றத்தில் குடிமக்களுக்கு நீதி அணுகுவதற்கான அடிப்படை உரிமையை மறுக்கிறார்” என விமர்சித்துள்ளார்.

அவரின் புகைப்படம் வெளியான நிலையில் இந்த அந்த புகைப்படத்தில், அவர் ஹார்லி டேவிட்சன் CVO 2020 மாடல் பைக்கில் அமர்ந்திருந்திருந்தார். இந்த பைக் நாக்பூரைச் சேர்ந்த பா.ஜ.க தலைவரான சோன்பா முசாலேவின் மகன் ரோஹித் சோன்பாஜி முசாலே பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஹார்லி டேவிட்சன் CVO 2020 மாடல் பைக் 50.83 லட்சம் மதிப்புள்ள மிக உயரிய ரக பைக் ஆகும். நீதிபதியே பா.ஜ.கவினருக்கு சொந்தமான பைக்கில் இருந்தபடி இருக்கும் புகைப்படத்திற்கு கடும் விமர்சணம் எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories