இந்தியா

கொரோனா பேரிடர் கால நிதி உதவி வழங்க உத்தரவிடக்கூடாது: மக்கள் நலப் பணியாளர்களுக்கு எதிராக தமிழக அரசு வாதம்!

மக்கள் நலப் பணியாளர்களுக்கு கொரோனா பேரிடர் கால அரசு நிதி உதவி வழங்க உத்தரவிடக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கொரோனா பேரிடர் கால நிதி உதவி வழங்க உத்தரவிடக்கூடாது: மக்கள் நலப் பணியாளர்களுக்கு எதிராக தமிழக அரசு வாதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பணி இல்லாமல் இருக்கும் தங்களுக்கும் கொரொனா பேரிடர் உதவிகளை வழங்க உத்தரவிட வேண்டும் என்று மக்கள் நலப்பணியாளர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுமீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது.

அப்போது, மக்கள் நலப் பணியாளர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன் பணியில்லாமல் இருக்கும் அவர்களுக்கும் இந்த பேரிடர் காலத்தில் நிவாரண உதவி வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதனிடையே கொரோனா பணிகளுக்காக புதிதாக வேலைக்கு ஆட்கள் எடுக்கப்பட்டுவருவதாகவும் வில்சன் தெரிவித்தார். அப்போது தமிழக அரசு வழக்கறிஞர், மூல வழக்கு நிலுவையில் இருக்கும் போது கொரோனா நிவாரணம் வழங்க வேண்டும் என்று உத்தரவு எதும் நீதிமன்றம் பிறப்பிக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து மக்கள் நலப்பணியாளர்கள் 11,000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை செப்டம்பர் மாதம் விசாரணக்குப் பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

banner

Related Stories

Related Stories