இந்தியா

“கூரிய ஆயுதங்களால் தாக்கிய சீன இராணுவம்”: துப்பாக்கிகளை பயன்படுத்தாது ஏன்? - வெளியுறவு அமைச்சர் விளக்கம்!

பெரிய கம்பிகளில் கூரிய ஆணிகள் பொருத்தப்பட்ட கொடூர ஆயுதங்கள் சண்டை நடந்த பகுதிகளில் கைப்பற்றப்பட்டுள்ளன.

“கூரிய ஆயுதங்களால் தாக்கிய சீன இராணுவம்”: துப்பாக்கிகளை பயன்படுத்தாது ஏன்? - வெளியுறவு அமைச்சர் விளக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

லடாக்கின் கிழக்கு பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் மேஜர் ஜெனரல் மட்டத்திலான இந்தியா - சீனா இராணுவ உயரதிகாரிகள் பல்வேறு கட்ட ஆலோசனைகளில் ஈடுபட்டு வந்தனர்.

ஜூன் 15-ம் தேதி மாலை இருதரப்பு இராணுவ உயரதிகாரிகள் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில், கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் படைகளை திரும்பப் பெறும்போது மோதல் வெடித்துள்ளது.

இந்தியா மற்றும் சீனா வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், சுமார் 20-க்கும் மேற்பட்ட இந்திய இராணுவத்தினர் உயிரிழந்தனர். சீனா தரப்பில் 40க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து எல்லைப் பகுதியில் கடும் பதற்றம் நிலவி வருகிறது.

கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சுமார் 8 மணி நேரம் நடைபெற்ற சண்டையில் துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் பயன்படுத்தப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.

இரும்புக் கம்பிகள், குச்சிகள், கற்களை வைத்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சீன இராணுவத்தினர் கம்பிகள் கொண்டு உருவாக்கப்பட்ட கொடூர ஆயுதம் கொண்டு தாக்கியதாகக் கூறப்படுகிறது.

“கூரிய ஆயுதங்களால் தாக்கிய சீன இராணுவம்”: துப்பாக்கிகளை பயன்படுத்தாது ஏன்? - வெளியுறவு அமைச்சர் விளக்கம்!

பெரிய கம்பிகளில் கூரிய ஆணிகள் பொருத்தப்பட்ட கொடூர ஆயுதங்கள் சண்டை நடந்த பகுதிகளில் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீன இராணுவத்தினர் இந்திய வீரர்களை இதுபோன்ற ஆயுதங்களைக் கொண்டு தாக்கிக் கொன்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, தற்காப்புக்கு துப்பாக்கி போண்ற ஆயுதங்கள் இன்றி இந்திய வீரர்கள் அனுப்பப்பட்டது ஏன் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதையடுத்து, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், “லடாக் எல்லையில் சீனாவுடனான மோதலின்போது இந்திய வீரர்களிடம் ஆயுதங்கள் இருந்தன. 1996, 2005 ஒப்பந்தங்களின்படி துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் பயன்படுத்தவில்லை” என விளக்கமளித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories