இந்தியா

பட்டினி கொடுமையால் புலம்பெயர் தொழிலாளி பரிதாப பலி : “உயிரிழந்தது தெரியாமல் தாயை எழுப்பமுயன்ற குழந்தை”!

பட்டினிக் கொடுமையால் தாய் உயிரிழந்தை கூட அறியாத பிஞ்சுக் குழந்தை தனது தாயை எழுப்ப முயன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பட்டினி கொடுமையால் புலம்பெயர் தொழிலாளி பரிதாப பலி : “உயிரிழந்தது தெரியாமல் தாயை எழுப்பமுயன்ற குழந்தை”!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உலக நாடுகளில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் தனது விஸ்வரூபத்தைக் காட்டி வருகிறது. கொரோனா வைரஸ் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த பிரதமர் மோடி நாடுமுழுவதும் முழு ஊரடங்கை அறிவித்தார்.

2 மாதங்களுக்கு மேல் ஊரடங்கு நீடிக்கும் நிலையில் இன்னும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊரை நோக்கி நடந்து சென்றுக்கொண்டே இருக்கின்றனர். எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் திடீரென அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை படுமோசமான நிலைக்குச் சென்றுள்ளது.

நாடுமுழுவதும் பெருளாதாரத் தேவைக்காக புலம்பெயர்ந்து சென்ற தொழிலாளர்கள் இந்த ஊரடங்கால் நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் தூரம் நடந்து மீண்டும் தங்கள் சொந்த கிராமங்களுக்குச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அப்படி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்து செல்லும்போது ஏற்பட்ட விபத்துகள் மற்றும் மருத்துவ அவசர நிலைகளின் காரணமாக 200-க்கும் மேற்பட்டவர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

பட்டினி கொடுமையால் புலம்பெயர் தொழிலாளி பரிதாப பலி : “உயிரிழந்தது தெரியாமல் தாயை எழுப்பமுயன்ற குழந்தை”!

எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை அடுத்து மத்திய அரசு புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தங்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க சிறப்பு ரயில்களை இயக்கிவருகிறது. இந்த சிறப்பு ரயில்கள்கள் இயக்குவதில் ஏற்பட்ட பல்வேறு குளறுபடிகளால் புலம்பெயர் தொழிலாளர்கள் இன்னும் கடுமையான இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.

அந்தவகையில் புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சொந்த ஊருக்குச் செல்லவேண்டிய சிறப்பு ரயில்கள் வேறு மாநிலத்தின் ரயில் நிலையங்களுக்குச் சென்று அவர்களை இறக்கிவிட்டு சென்றுள்ளது. இதனால் பல மாநிலங்களில் சொந்த ஊருக்குச் செல்லாமல் ரயில் நிலையங்களில் உணவின்றி காத்திருக்கின்றனர்.

அந்தவகையில் குஜராத் மாநிலத்தில் இருந்து சொந்த ஊரான பீகாருக்குச் செல்ல வேண்டிய ரயில் தாமதமானதால் பசி மயக்கத்தால் பெண் ஒருவர் ரயில் நடைமேடையிலேயே உயிரிழந்துள்ளார். தாய் உயிரிழந்தது தெரியாமல் அவரை குழந்தை எழுப்ப முயற்சிக்கும் வீடியோ பார்ப்போரை கலங்கச் செய்துள்ளது.

இதுதொடர்பான வெளியான வீடியோ ஒன்றில், குழந்தை தன் தாயை எழுப்புவதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது. போர்வையை அசைத்து விளையாடியும் தாய் எழுந்திருக்கவில்லை. தாய் இறந்துவிட்டதை அறிந்துகொள்ளமுடியாத குழந்தைக்கு ஏற்பட்டுள்ள கொடுமை பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ குறித்து வெளியான தகவலின்படி, பீகாரைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளி தனது மகனுடன் சொந்த ஊருக்குச் சிறப்பு ரயிலில் பயணிக்க குஜராத் ரயில் நிலையம் வந்துள்ளார். மற்ற பரிசோதனைகள் எல்லாம் முடிந்து ரயில் புறப்படுவதற்கு முன்பு நடைமேடையிலேயே அந்த பெண் சரிந்து விழுந்துள்ளார். உணவு தண்ணீர் இல்லாமல் பயணித்ததாக உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்யே போலிஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் குழந்தையும் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப் பட்டதாக கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories