இந்தியா

“சுய விளம்பரத்துக்காக நாட்டை சீர்க்குலைக்கிறது மோடி அரசு” - ராமச்சந்திர குஹா பகிரங்க குற்றச்சாட்டு!

மத்திய அரசின் திடீர் ஊரடங்கு அறிவிப்பு மனிதனால் மனிதர்களுக்கு உண்டான மிகப்பெரிய சோகம் என வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா குற்றஞ்சாட்டியுள்ளார்.

“சுய விளம்பரத்துக்காக நாட்டை சீர்க்குலைக்கிறது மோடி அரசு” - ராமச்சந்திர குஹா பகிரங்க குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் நாடு முழுவதும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எதிர்காலமும், வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது.

ஊரடங்கால் வேலையில்லாமல் தவித்து வரும் புலம்பெயந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்வதற்காக மார்ச் 25ம் தேதி இந்தியாவில் சாலைகளில் நடக்கத் தொடங்கியவர்கள் 60 நாட்கள் ஆன போதும் கால்நடையாக படையெடுப்பதை நிறுத்தியபாடில்லை.

கடந்த 60 நாட்களில் சோர்வாலும், விபத்தில் சிக்கியும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவங்களும் நேர்ந்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் பொருளாதார வல்லுநர்களில் ஒருவரான ராமச்சந்திர குஹா முதல் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதும் ஒரு வாரகாலம் அவகாசம் கொடுத்திருந்தால் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு எப்போதோ சென்றடைந்திருப்பார்கள் என கருத்து தெரிவித்துள்ளார்.

“சுய விளம்பரத்துக்காக நாட்டை சீர்க்குலைக்கிறது மோடி அரசு” - ராமச்சந்திர குஹா பகிரங்க குற்றச்சாட்டு!

இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ள அவர், “கொரோனா வைரஸால் தொற்று பாதித்தவர்களை விட அதன் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் மிகப்பெரிய துயரத்தையும் இன்னல்களையும் அனுபவித்து வருவது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்தான்.

அவசர அவசரமான ஊரடங்கு அறிவிப்பால், பொது சுகாதாரம், பொருளாதாரம், சமூகம் ஆகிய மூன்று பிரிவுகளிலும் மிகப்பெரிய துயரங்கள் உண்டாகியுள்ளன. ஊரடங்கு அறிவிப்பதற்கு முன்போ அல்லது அறிவித்த பின் அவகாசம் கொடுத்திருந்தால் வெளிமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர்களை சென்றடைந்திருப்பார்கள். அவ்வாறு சென்றதன் மூலம் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்திருக்காது.

பிரிவினைக்கு பின்னர் நாட்டில் சுயநலமில்லாத சிறந்த தலைவர்கள் இருந்தார்கள். ஆனால் தற்போது மத்திய மோடி அரசு சுய விளம்பரத்துக்காக இந்தியாவின் ஒருங்கிணைந்த சமூக, பொருளாதார கட்டமைப்பை சீர்குலைக்கிறார்கள்.

இப்போதாவது பாஜக அரசு எதிர்கட்சித் தலைவர்கள், அறிவார்ந்த பொருளாதார ஆலோசகர்கள், சிந்தனையாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்தால் நிலைமையை சற்று மாற்ற முடியும்.

இதனை மேற்கொள்ளாவிடில் பொருளாதாரத்தில் அடுக்கடுக்கான பல விளைவுகளை சந்திக்க நேரிடும். ஏற்கெனவே மோசமான நிலையில் இருந்த இந்திய பொருளாதாரம் தற்போது சீர்குலையும் நிலையில் உள்ளது.” என ராமச்சந்திர குஹா கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories