இந்தியா

“ஊழியர்களுக்கு இனி முழு சம்பளம் தேவையில்லை?” : நிறுவனங்களுக்கு சாதகமாக உத்தரவை திரும்பப்பெற்ற மோடி அரசு!

கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட நிறுவனங்கள் ஊழியர்களுக்கு பிடித்தமின்றி ஊதியம் வழங்கிட வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“ஊழியர்களுக்கு இனி முழு சம்பளம் தேவையில்லை?” : நிறுவனங்களுக்கு சாதகமாக உத்தரவை திரும்பப்பெற்ற மோடி அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாடுமுழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொட்டுள்ளது. இந்த பாதிப்பைத் தடுக்கும் நடவடிக்கையாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்த ஊரடங்கு காலத்தில் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு முழு ஊதியத்தை ஊழியர்களுக்கு வழங்கவேண்டும் என மத்திய அரசு 2005-ம் ஆண்டு தேசியப் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்படி அறிவித்திருந்தது.

அரசின் இந்த உத்தரவை எதிர்த்து பல நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. வழக்கை விசாரித்த நீதிமன்றம் இதுதொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்கக் கோரியிருந்தது.

பதில் அளிக்கவேண்டிய மோடிஅரசு இந்த சூழலில் மார்ச் 29ம் தேதி கொண்டுவந்த உத்தரவை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த உத்தரவால் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் குறைக்கப்படும் என்றும், சம்பளம் முழுவதுமே தாராமல் இழுத்தடிக்கப்படும் நிலையும் உருவாகும் எனக் கூறப்படுகிறது.

“ஊழியர்களுக்கு இனி முழு சம்பளம் தேவையில்லை?” : நிறுவனங்களுக்கு சாதகமாக உத்தரவை திரும்பப்பெற்ற மோடி அரசு!

தொழில் நிறுவனங்கள் நஷ்டம் ஏற்பட்டால் அதற்கு சலுகை அளித்துப் பாதுகாக்கும் அரசு, அங்கு பணிபுரியும் தொழிலாளர்களை துளியும் கண்டுகொள்ளவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது என அரசியல் கட்சியினர் விமர்சித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories