இந்தியா

புதிய மின்சார திருத்தச் சட்டம் : பா.ஜ.க.,வை அன்றே எதிர்த்த தி.மு.க - இப்போது கெஞ்சும் அ.தி.மு.க!

கொரோனா நிவாரண பணிகளில் ஈடுபட்டபோதும் கூட மாநில உரிமைகளை பாதுகாக்க கவனம் செலுத்தி வரும் தி.மு.க தலைவருக்கு இருக்கும் அக்கரை மாநில முதல்வருக்கு துளிகூட இல்லை என அரசியல் கட்சியினர் விமர்சிக்கின்றனர்.

புதிய மின்சார திருத்தச் சட்டம் : பா.ஜ.க.,வை அன்றே எதிர்த்த தி.மு.க - இப்போது கெஞ்சும் அ.தி.மு.க!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மத்திய அரசு ‘மின்சார சட்ட திருத்த மசோதா - 2020’ என்ற ஒன்றைக் கொண்டுவந்துள்ளது. அதாவது 2003ம் ஆண்டின் மின்சாரச் சட்டத்தில் பல திருத்தங்களைச் செய்வதற்கான புதிய திருத்தச் சட்டத்தை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கான வரைவு சட்ட அறிக்கையை ஏப்ரல் 17ம் தேதி வெளியிட்டுள்ளது.

வெறும் 21 நாட்களுக்குள் இதுதொடர்பான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் இருந்தால் கூறலாம் என கூறி அறிக்கையை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் புதிய மின்சார திருத்தச் சட்டத்திற்கான வரைவு அறிக்கையில், மாநில உரிமைகளுக்கு எதிராகவும், தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும், ஏழை மக்களிடம் இருந்து பணம் பறிக்க முயற்சிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

மத்திய அரசின் இந்த வஞ்சகம் வெளியான நாளன்றே தமிழகத்தில் முதன் முதலாக புதிய மின்சார திருத்தச் சட்டத்தை அ.தி.மு.க. அரசு கடுமையாக எதிர்த்திட வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி அறிக்கையும் வெளியிட்டார்.

புதிய மின்சார திருத்தச் சட்டம் : பா.ஜ.க.,வை அன்றே எதிர்த்த தி.மு.க - இப்போது கெஞ்சும் அ.தி.மு.க!

அந்த அறிக்கையில், “விவசாயிகளின் இலவச மின்சாரத் திட்டத்திற்கும், ஏழை - நடுத்தர மக்களுக்கு நூறு யூனிட் வரை வழங்கப்படும் இலவச மின்சாரத்திற்கும் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் புதிய மின்சார திருத்தச் சட்டத்தை சட்டத்தை அ.தி.மு.க. அரசு கடுமையாக எதிர்த்திட வேண்டும்.

மாநில உரிமைகளைக் காப்பாற்றி, கூட்டாட்சித் தத்துவத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்பதில் ஆர்வமும் நம்பிக்கையும் உள்ள பா.ஜ.க அல்லாத மாநில அரசுகள் அனைத்தும் இந்த சட்டத் திருத்தத்தைக் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மாநிலங்களை ஓரங்கட்டி, அதிகாரங்களை மையப்படுத்திக் கொள்ளும் அடுத்தகட்டமான இந்தச் சட்டத் திருத்தத்தை, மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இந்த அறிக்கையை கடந்த மே 8ம் தேதி வெளியிட்டுள்ளார்.

பல்வேறு கொரோனா பணிகளில் ஈடுபட்டபோதும் கூட மாநில உரிமைகளை பாதுகாக்க கவனம் செலுத்தி வரும் தி.மு.க தலைவருக்கு இருக்கும் அந்த அக்கரை மாநில முதல்வருக்கு இல்லை என அரசியல் கட்சியினர் விமர்சிக்கின்றனர். அதற்கு காரணம் மே 8 - புதிய மின்சார திருத்தச்சட்டத்தினால் ஏழைகளுக்கான இலவச மின்சாரம் பறிபோகும். அ.தி.மு.க இதை கடுமையாக எதிர்க்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி 10 நாட்களாகிறது.

ஆனால் 10 நாட்கள் சாவுகாசமாக இருந்துவிட்டு ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் கூறும் நாட்கள் முடியப் போகும் நேரத்தில், மே 18ம் தேதி அன்று அதாவது நேற்றைய தினம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், ஐயா.. இலவச மின்சாரத்த நிறுத்திடாதீங்க! மத்திய அரசின் யோசனையை கடுமையாக எதிர்க்கிறோம் என கடிதம் ஒன்றை மோடிக்கு எழுதியுள்ளார். இதற்கு பிறகு இந்த கடிதம் குறித்து பேசுவாரா என்பது கூட தெரியவில்லை.

புதிய மின்சார திருத்தச் சட்டம் : பா.ஜ.க.,வை அன்றே எதிர்த்த தி.மு.க - இப்போது கெஞ்சும் அ.தி.மு.க!

இந்நிலையில் பிரதமருக்கு எழுதிய கடித்தில் கூட “ஐந்துவித பொருளாதார நிவாரண தொகுப்பை அறிவித்த தங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்திய பொருளாதாரத்தை புதுப்பிக்க இது உதவிகரமாக இருக்கும் என்று நம்புகிறேன்” என கூறியிருக்கிறார். மாநிலங்களுக்குத் தரவேண்டிய ஜி.எஸ்.டி வரியை தராதவர்களிடம் இப்படி புகழ்ந்து தள்ளி கடிதம் எழுதினால் மீதமிருக்கும் தொகையை எப்படி தருவார்கள். மேலும் கடிதம் முழுவதும் படிப்பவர்களுக்கு மனது நோகாதபடி எழுதப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மாநில உரிமைகள் பறிபோகும் நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அதி தீவிரமாக செயல்படுகிறார்; ஆனால் மாநில உரிமைகள் பறிபோவதையும் விவசாயிகளுக்கு வழங்கும் இலவச மின்சாரம் பறிபோவதையும் கவலைப்படாமல் அலட்சியமாக மாநில முதல்வர் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories