இந்தியா

உஷார்!!! “கொரோனா பெயரில் வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடும் புதிய வைரஸ்” - சி.பி.ஐ எச்சரிக்கை!

வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தைத் திருட இணையதள வைரஸ் ஒன்று பரப்பப்பட்டு வருவதாக சி.பி.ஐ எச்சரித்துள்ளது.

உஷார்!!! “கொரோனா பெயரில் வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடும் புதிய வைரஸ்” -  சி.பி.ஐ எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தைத் திருட இணையதள வைரஸ் ஒன்று பரப்பப்பட்டு வருவதாக சி.பி.ஐ எச்சரித்துள்ளது. இன்டர்போல் மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் சி.பி.ஐ, அனைத்து மாநில அரசுகளுக்கும், வங்கிகளுக்கும் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை அனுப்பியுள்ளது.

கொரோனா தொற்று தொடர்பான விபரங்களைப் பெற குறிப்பிட்ட செயலியைப் பதிவிறக்கும் செய்யும்படி பொதுமக்களுக்கு குறுந்தகவல் அனுப்பப்படுகிறது. அதனை யாரவரது பதிவிறக்கம் செய்தால் அதில் மறைந்துள்ள ‘Cerberus Trojan’ எனும் இணையதள வைரஸ் கணினி அல்லது செல்போனில் புகுந்துகொள்ளும்.

உஷார்!!! “கொரோனா பெயரில் வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடும் புதிய வைரஸ்” -  சி.பி.ஐ எச்சரிக்கை!

அதன் மூலம் மின்னஞ்சல் முகவரி, வங்கிக் கணக்கு விவரங்கள், கிரெடிட் கார்டு விவரங்களையும் ரகசிய குறியீடுகளையும் திருட முடியும் என்று கூறப்படுகிறது. பின்னர் அதனைப் பயன்படுத்தி வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் திருடப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

ஆகவே கொரோனா பெயரில் வரும் நம்பகத்தன்மை இல்லாத செயலிகளை பொதுமக்கள் பதிவிறக்கம் செய்யக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories