இந்தியா

“ரூ.20 லட்சம் கோடி பிரம்மாண்ட அறிவிப்பு - ஆனால் ஏழைகளுக்கு 1 ரூபாய் கூட தரமாட்டார்கள்” : ப.சிதம்பரம்

ரூ.20 லட்சம் கோடி என்று பிரம்மாண்டமான அறிவிப்பு. ஆனால் ஏழைகளுக்கு ஒரு ரூபாய் கூடத் தரமாட்டார்கள் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றச்சாட்டியுள்ளார்.

“ரூ.20 லட்சம் கோடி பிரம்மாண்ட அறிவிப்பு - ஆனால் ஏழைகளுக்கு 1 ரூபாய் கூட  தரமாட்டார்கள்” : ப.சிதம்பரம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உலகை அச்சுறுத்திய கொரோனா பாதிப்பு இந்தியாவில் தனது தீவிரத் தன்மையைக் குறைத்துக்கொள்ளவில்லை. கொரோன தடுப்பு நடவடிக்கையாக மார்ச் இறுதியில் தொடங்கிய ஊரடங்கை 3 வது கட்டமாக நீடித்துள்ளது மத்திய அரசு. தற்போது அந்த மூன்றாம் கட்ட ஊரடங்கு வரும் மே 17-ம் வரை நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் இரண்டு நாட்களுக்கு முன்னதாக அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய்கான திட்டத்தை சுயசார்பு பாரம் என்று தொகுப்பை அறிமுகப்படுத்தினார். இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து விமர்சித்து வருகின்றனர்.

மாநிலங்கள் வரலாறு காணாத நிதி நெருக்கடியில் சிக்கிச் சீரழிந்து கிடக்கும் நிலையில், நிதி ஒதுக்கீடு எதுவும் அறிவிக்கப்படாதது ஏமாற்றத்தைத் தருவதாகவும், இப்போதும் இந்த அறிப்பு வெறுங்கையால் முழம் போடும் வேலையாக இருப்பதாக தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டினர்.

இந்நிலையில், முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான பா.சிதம்பரம் ஏழைகள் இருந்தால் என்ன, மடிந்தால் என்ன என்று நினைக்கும் அரசு நம்மை ஆள்கிறது என விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ரூ.20 லட்சம் கோடி என்று பிரம்மாண்டமான அறிவிப்பு. ஆனால், புலம் பெயர்ந்து நடந்தே வந்து வீடு திரும்பிய தொழிலாளர்களுக்கு ஒரு ரூபாய் கூடத் தரமாட்டார்கள்.

மக்கள் தொகையில் கீழ்ப் பாதியில் இருக்கும் 13 கோடி குடும்பங்களுக்கு தலா ரூ.5,000 கொடுங்கள் என்று சொல்கிறோம். ஏழைக் குடும்பங்களுக்கு அரசு ஒரு ரூபாய் கூடத் தர மறுக்கிறது. இந்த நாட்டின் ஏழைகள் இருந்தால் என்ன, மடிந்தால் என்ன என்று நினைக்கும் அரசு நம்மை ஆள்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories