இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மேலும் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் தொழில்கள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள் என அனைத்தும் மூடப்பட்டதால் அரசுக்கு வருவாய் பெருமளவு குறைந்துவிட்டது. இந்த ஊரடங்கால் மக்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர்.
இந்தச் சூழலில் தளர்வுகள் அளித்தாலும் நிறுவனங்கள் முழுமையாகச் செயல்படமுடியாத சூழலே உள்ளது. தொடர்ந்து நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் பொருளாதார பாதிப்பு காரணமாக உற்பத்தித் துறையில் கடும் சரிவை சந்தித்துள்ளது.
குறிப்பாக, கொரோனா தாக்கம் காரணமாக, இந்தியாவில் 40 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு அமலில் உள்ளதால், நாட்டில் உற்பத்தி தொழிற்துறை ஏப்ரல் மாதத்தில் கடும் சரிவைச் சந்தித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியான இந்நிலையில் இந்தியாவுக்கான மாதாந்திர உற்பத்தி குறியீட்டு அறிக்கையில் வெளியான அறிக்கையில், , மார்ச் மாதத்தில் 51.8 புள்ளிகளாக இருந்த குறியீடு, கொரோனா தாக்கம் மற்றும் ஊரடங்கு அமலுக்குப் பிறகு ஏப்ரலில் 27.4 புள்ளிகளாக சரிந்துள்ளது.
மேலும், “மார்ச் மாதத்தில் இருந்து ஏப்ரல் மற்றும் மே - என நீடித்த கொரோனா வைரஸ் தொற்று பீதி முற்றிலுமாக நீங்கி, ஊரடங்கு கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டாலும் உற்பத்தித் துறை பழைய நிலையை எட்டுவதற்கு ஓராண்டு ஆகலாம்” என்று உற்பத்தித் துறையினர் கணித்துள்ளதாகவும் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
அதேப்போல், இந்திய சேவைத் துறையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் 5.4 ஆக குறைந்துள்ளது. இது கடந்த மார்ச் மாதத்தில் 49.3 ஆக இருந்தது. அதுமட்டுமின்றி, இதே காலகட்டத்தில், டாலருக்கு இணையான ரூபாயின் மதிப்பும் கடந்த15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளதும் என்பது குறிப்பிடத்தக்கது.