இந்தியா

'குழந்தை தொழிலாளர்களின் நிலையை உலகுக்கு உணர்த்திய ஆவணப்படக்காரர்' - சலம் பென்னுராக்கர் நினைவுதினம் இன்று!

சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை வென்ற குட்டி ஜப்பானின் குழந்தைகள் ஆவணப்பட இயக்குநர் சலம் பென்னுராக்கர் நினைவுதினம் இன்று.

குட்டி ஜப்பானின் குழந்தைகள் ஆவணப்படத்தில் ஒரு காட்சி.
குட்டி ஜப்பானின் குழந்தைகள் ஆவணப்படத்தில் ஒரு காட்சி.
  • Twitter
  • Facebook
  • WhatsApp

சிவகாசி, பட்டாசுத் தொழிலுக்கு புகழ்பெற்ற ஊராகும். இங்கு தீப்பெட்டி தொழிற்சாலைகளும் பட்டாசு தொழிற்சாலைகளும் சிறியதும் பெரியதுமாக நிறைய இருக்கின்றன. சிவகாசி அச்சுத் தொழிலுக்கும் பெயர்பெற்ற ஊராகும். இது குட்டி ஜப்பான் என்றும் அழைக்கப்படுகிறது.

1960களில் சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன. அன்று இருந்த தேசிய பொருளாதார நிலையின்மையிலும் இந்த ஊரில் வசிக்கும் மக்கள் தங்களின் தொழில் திறனை வைத்து ஸ்திரமான நிலையினை தக்க வைத்துகொண்டனர். இந்தியாவின் தீப்பெட்டி உற்பத்தியில் 80% தீப்பெட்டிகள் இந்த ஊரில் தான் தயார் செய்யப்படுகின்றன. மேலும் இந்தியாவில் தயாராகும் பட்டாசுகளில் 90% சிவகாசியில் தான் தயாராகின்றன.

மேலும் இந்தியாவின் அச்சுத்துறையில் 60% இங்கு செய்யப்படுகின்றன. மேலும் இந்த ஊர் மக்களுக்கு 100% வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. 1980களில் இந்த ஊரில் குழந்தை தொழிலாளர்கள் அதிகம் இருந்ததாக கணக்கிடப்பட்டு இப்போது அது முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டது. இந்த பின்னணியில் குழந்தை தொழிலாளர்களை பற்றி 1990 ல் ‘குட்டி ஜப்பானின் குழந்தைகள்’ என்னும் ஆவணப்படத்தை எடுத்தவர் சலம் பென்னுராக்கர்.

ஆவணப்பட இயக்குநர் சலம் பென்னுராக்கர்.
ஆவணப்பட இயக்குநர் சலம் பென்னுராக்கர்.

உலகெங்கும் உள்ள சர்வதேச ஆவணப்பட போட்டிகளில் பங்கெடுத்து பல பரிசுகளை வென்றது ‘குட்டி ஜப்பானின் குழந்தைகள்’ என்ற இந்த ஆவணப் படம். அதைத் தொடர்ந்து பல ஆவணப்படங்களை இயக்கிய அவர், கடந்த 2017 ஆண்டு மே மாதம் 6ந் தேதி தனது 62 வது வயதில் பெங்களுரில் காலமானார்.

பெங்களூர் திரைப்படச்சங்கத்தை [ Bangalore Film Society ] உருவாக்கி தொடர்ந்து திரைப்படங்களை திரையிடக்காரணமானவர் சலம் பென்னுராக்கர். சமூக அவலங்களை தனது ஆவணப்படங்களின் மூலம் தோலுரித்துக் காட்டியவர் அவர்.

banner

Related Stories

Related Stories