இந்தியா

“பழிவாங்கும் படலமா?” - பிரசாந்த் பூஷண், கண்ணன் கோபிநாதன் ஆகியோர் மீது குஜராத் போலிஸார் வழக்குப்பதிவு!

பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி கண்ணன் கோபிநாதன் ஆகியோர் மீது குஜராத் போலிஸார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

“பழிவாங்கும் படலமா?” - பிரசாந்த் பூஷண், கண்ணன் கோபிநாதன் ஆகியோர் மீது குஜராத் போலிஸார் வழக்குப்பதிவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண். சமூக நல ஆர்வலரான இவர், கடந்த மார்ச் 28ந் தேதியன்று ட்விட்டரில் கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார்.

"கட்டாய ஊரடங்கு உத்தரவினால் கோடிக்கணக்கான மக்கள் பட்டினி கிடந்து, நூற்றுக்கணக்கான மைல்கள் நடந்து செல்லும்போது, எங்கள் இதயமற்ற அமைச்சர்கள் ராமாயணம் மற்றும் மகாபாரதத்தின் ஓபியத்தை மக்களுக்கு உட்கொண்டு உணவளிப்பதைக் கொண்டாடுகிறார்கள்" என்று அவர் ட்வீட் செய்திருந்தார்.

நேஷனல் ஹெரால்ட் செய்தித்தாளின் செய்தி ஆசிரியர் கோபிநாதன் மற்றும் அஷ்லின் மேத்யூ ஆகியோர் இதனை மறுபதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் ராஜ்கோட்டைச் சேர்ந்த ஜெய்தேவ் பாய் ஜோஷி என்ற ராணுவத்தின் ஓய்வுபெற்ற கேப்டன் இதுகுறித்து புகார் அளித்தார். அவர் தனது புகாரில், ராமாயணம் மற்றும் மகாபாரதத்துடன் ‘ஓபியம்’ என்ற வார்த்தையை பயன்படுத்தியது ‘பல இந்து மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியது’ என்று கூறி புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், இந்த மூவருக்கும் எதிராக இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 295 (ஏ) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது (எந்தவொரு வகுப்பினதும் மத உணர்வுகளை சீர்குலைக்கும் நோக்கில் வேண்டுமென்றே மற்றும் தீங்கிழைக்கும் செயல்கள் அதன் மதத்தையோ அல்லது மத நம்பிக்கைகளையோ அவமதிப்பதன் மூலம்), 505 (1) (வெளியீடு அல்லது மக்கள் மத்தியில் அச்சத்தையும் எச்சரிக்கையையும் ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு அறிக்கை, வதந்தி அல்லது அறிக்கையை பரப்புதல்), 34 (பல நபர்களால் செய்யப்பட்ட குற்றச் செயல்) மற்றும் ஐபிசியின் 120-பி (குற்றவியல் சதி) ஆகிய பிரிவுகளின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதைப்போன்று அரசாங்க உத்தரவுகள் குறித்து கருத்து தெரிவித்ததற்காக முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரி கண்ணன் கோபிநாதன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 9ந் தேதியன்று ட்விட்டரில் பதிவு ஒன்றினை வெளியிட்டிருந்தார்.

அதில் COVID-19 தொற்றுநோயைத் தொடர்ந்து உடனடியாக கடமையில் சேருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு, “அரசாங்கத்திடமிருந்து ஒரு கடிதம் வந்தது, கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்த போராட்டத்தில் நான் பொறுப்புள்ள குடிமகனாக எனது அனைத்து சேவைகளையும், உடல் அளவிலும், பொருள் அளவிலும் இலவசமாக தருவேன். இனி ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருக்க முடியாது என்று அவர் தனது ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

இதனடிப்படையில் அரசாங்க உத்தரவுகள் குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதற்காக கண்ணன் கோபிநாதன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு பதிலடியாக அவர் மீண்டும் ஒரு ட்விட்டர் பதிவை பதிந்துள்ளார்.

அதில் "எனவே குஜராத் காவல்துறை எனக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளது. அரசாங்க உத்தரவுகளை தவறாக பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. நல்ல முயற்சி அமித்ஷா. நீங்கள் கைது செய்யலாம். ஆனால் நீங்கள் அமைதியாக இருக்க மாட்டீர்கள். இங்கே யாரும் உங்களைப் பற்றி பயப்படுவதில்லை. அன்புள்ள பிரதமர் நரேந்திர மோடி, உங்கள் தினசரி விளக்கங்கள் தொடரட்டும்” என்று அவர் பதிலடி அளித்துள்ளார்.

ஊரடங்கின்போதும் கூட, மோடி அரசின் பழிவாங்கும் படலம் தொடர்வதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

banner

Related Stories

Related Stories