இந்தியா

“நாம் யாரோடு போட்டி போடுகிறோம் தெரியுமா?” : கொரோனா பரிசோதனை விவகாரத்தில் பா.ஜ.க-வை வெளுக்கும் ராகுல்!

பரிசோதனைகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டிவரும் ராகுல் காந்தி எம்.பி இன்றும் பா.ஜ.க அரசை விளாசியுள்ளார்.

“நாம் யாரோடு போட்டி போடுகிறோம் தெரியுமா?” : கொரோனா பரிசோதனை விவகாரத்தில் பா.ஜ.க-வை வெளுக்கும் ராகுல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கு 1 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதுவரை 19 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலும் மிகக் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸால் இதுவரை 366 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பரிசோதனைகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

மத்திய பா.ஜ.க அரசு கொரோனா தடுப்பு பணிக்காக போதிய நிதி ஒதுக்கவில்லை என்றும், பரிசோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவில்லை என்றும் காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

“நாம் யாரோடு போட்டி போடுகிறோம் தெரியுமா?” : கொரோனா பரிசோதனை விவகாரத்தில் பா.ஜ.க-வை வெளுக்கும் ராகுல்!

இந்நிலையில், பரிசோதனைகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டிவரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி இன்றும் பா.ஜ.க அரசை விளாசியுள்ளார்.

ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் போரில் முக்கியமான ஆயுதம் அதிகமான மக்களுக்குப் பரிசோதனை நடத்துவதுதான். ஆனால் இன்னும் பரிசோதனை விஷயத்தில் பின்தங்கியே இருக்கிறோம்.

இந்தியா பரிசோதனைக் கருவிகளை வாங்குவதில் தாமதித்து வருகிறது. இதனால், வருங்காலத்தில் பரிசோதனைக் கருவிகளுக்குப் பற்றாக்குறை ஏற்படலாம். தற்போது 10 லட்சம் இந்தியர்களில் வெறும் 149 பேருக்கு மட்டுமே பரிசோதனை நடத்தி வருகிறோம்.

மிகவும் பின்தங்கிய நாடான லாவோஸ், 10 லட்சம் மக்களில் 157 பேருக்கு பரிசோதனை நடத்துகிறது. பத்து லட்சம் மக்களுக்கு நைஜீரியா 182, ஹோண்டுராஸ் 162 பேருக்குப் பரிசோதனை நடத்துகிறது. இந்த நாடுகளுடன்தான் இந்தியாவும் இப்போது இருக்கிறது.

மக்களுக்கு மிகப்பெரிய அளவில் பரிசோதனை நடத்துவது அவசியம். தற்போது இந்த பரிசோதனை நடத்தும் ஆட்டத்திலேயே நாம் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories