இந்தியா

“கொரோனாவை எதிர்கொள்வது சவாலாக உள்ளது; மேலும் 3 வாரம் ஊரடங்கு தேவை” - ஹர்ஷவர்தன் வலியுறுத்தல்!

வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கோடு பரவலான பரிசோதனையும் மேற்கொள்ளப்பட வேண்டும் என பல தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

“கொரோனாவை எதிர்கொள்வது சவாலாக உள்ளது; மேலும் 3 வாரம் ஊரடங்கு தேவை” - ஹர்ஷவர்தன் வலியுறுத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் வேளையில், அதனை எதிர்கொள்வது மிகப்பெரிய சவாலாக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் கூறியுள்ளார்.

மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் இன்று காணொளிக் காட்சி மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

சுமார் இரண்டு மணிநேர ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஹர்ஷவர்த்தன், கொரோனா பரவலைத் தடுக்க மேலும் மூன்று வார காலம் அவகாசம் தேவைப்படுகிறது எனப் பேசியுள்ளார்.

“கொரோனாவை எதிர்கொள்வது சவாலாக உள்ளது; மேலும் 3 வாரம் ஊரடங்கு தேவை” - ஹர்ஷவர்தன் வலியுறுத்தல்!

இது தொடர்பாக அவர் பேசியதன் விவரம் :

“மேலும் 3 வாரம் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தால் இந்தியாவில் நிச்சயமாக கொரோனா வைரஸ் பரவுவதை முற்றிலுமாகத் தடுத்துவிட முடியும். ஏற்கெனவே மத்திய அரசிடம் மே 15 வரை ஊரடங்கை நீட்டிக்குமாறு சுகாதார அமைச்சகம் பரிந்துரைத்திருந்தது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகள் எவ்வாறு பின்பற்ற வேண்டும் எனவும் ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கை நீட்டித்து சமூக இடைவெளியை கடைபிடிப்பதுதான் தடுப்பு மருந்தாக அமையும்” என ஹர்ஷவர்த்தன் கூறியுள்ளார்.

இதற்கிடையே, பஞ்சாப், ஒடிசா ஆகிய மாநிலங்கள் ஏற்கெனவே ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது. அதுபோக தெலங்கானா, கேரளா, ராஜஸ்தான் என பல்வேறு மாநில அரசுகளும் ஊரடங்கை நீட்டிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளன. இன்று தமிழகத்தில், முதலமைச்சருடனான ஆலோசனைக் கூட்டத்திலும் 19 மருத்துவக் குழுக்கள் மேலும் 2 வாரம் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நாளை பிரதமர் - மாநில முதலமைச்சர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதற்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக ஊரடங்கு நீட்டிப்பு குறித்து மத்திய அரசு அறிவிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகக் கருதப்படுகிறது.

“கொரோனாவை எதிர்கொள்வது சவாலாக உள்ளது; மேலும் 3 வாரம் ஊரடங்கு தேவை” - ஹர்ஷவர்தன் வலியுறுத்தல்!

அவ்வாறு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் தினக்கூலித் தொழிலாளர்கள், சிறு, குறு வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கான அனைத்து அத்தியாவசியத் தேவைகளும் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே அனைவரது வேண்டுகோளாக இருக்கிறது. மேலும், ஊரடங்கை மட்டும் நீட்டித்து உத்தரவிடாமல், பரவலான கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories