இந்தியா

“கொரோனாவால் ஒரேநாளில் 30 பேர் பலி - 547 பேருக்கு நோய் தொற்று”: மோசமான நிலையில் இந்தியா - அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,412 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 199 ஆக அதிகரித்துள்ளது.

“கொரோனாவால் ஒரேநாளில் 30 பேர் பலி - 547 பேருக்கு நோய் தொற்று”: மோசமான நிலையில் இந்தியா - அதிர்ச்சி தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சீனாவில் தொடங்கிய கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிகத் தீவிரமாக பரவிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான நாடுகள் தங்கள் எல்லைகளை மூடி தங்கள் மக்களை பாதுகாத்து வருகின்றன. இந்தியாவிலும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தபோதிலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவது நாட்டு மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நாடு முழுவதும் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,412 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 199 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக, கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 547 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 30 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

“கொரோனாவால் ஒரேநாளில் 30 பேர் பலி - 547 பேருக்கு நோய் தொற்று”: மோசமான நிலையில் இந்தியா - அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,364 பேர் பாதிகப்பட்டு இதுவரை 97 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 834 பேருக்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இல்லாத அளவாக கடந்த 24 மணி நேரத்தில் நாடுமுழுவதும் 30 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 504 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது சுகாதாரத்துறை மீது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. ஒருவேளை வைரஸை எதிர்கொள்ளும் அளவிற்கு மோடி அரசிடம் திட்டங்கள் மற்றும் மருத்துவ வசதிகள் இல்லையா என்ற கேள்வியும், சந்தேகமும் பரவலாக எழத் தொடங்கி உள்ளது.

banner

Related Stories

Related Stories