இந்தியா

“கொரோனா தொற்று அபாயமில்லாத பேருந்து” : சேவையைத் துவங்கிய கேரள அரசு! #Covid19

கேரளாவில் கொரோனா தொற்று அபாயம் இல்லாமல் பாதுகாப்புடன் கூடிய பேருந்து திருவனந்தபுரத்தில் முதன்முறையாக இயக்கப்பட்டது.

“கொரோனா தொற்று அபாயமில்லாத பேருந்து” : சேவையைத் துவங்கிய கேரள அரசு! #Covid19
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று தினந்தோறும் அதிகரித்து வருவதால் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஊரடங்கால் தினக்கூலித் தொழிலாளர்களும், ஏழை எளிய மக்களும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று அபாயம் காரணமாக பொதுப் போக்குவரத்தும் முழுமையாக முடங்கியிருப்பதால் மருத்துவமனைகளுக்குச் செல்வதற்கு வழியற்ற சூழலில் ஏழை மக்கள் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கேரளாவில் கொரோனா தொற்று அபாயம் இல்லாமல் பாதுகாப்புடன் கூடிய பேருந்து திருவனந்தபுரத்தில் முதன்முறையாக இயக்கப்பட்டது. இந்தப் பேருந்தை கேரள காவல்துறை டி.ஜி.பி லோக்நாத் பெஹரா தொடங்கி வைத்தார்.

“கொரோனா தொற்று அபாயமில்லாத பேருந்து” : சேவையைத் துவங்கிய கேரள அரசு! #Covid19

காவல்துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகள் ஆகியோர் பயணம் செய்ய இந்தப் பேருந்து பயன்படுத்தப்படவுள்து. தொடர்ந்து கேரளாவின் மற்ற பகுதிகளிலும் இதேபோன்ற பேருந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியிலும் இதுபோன்ற பேருந்து சேவையை அம்மாநில அரசு தொடங்கவுள்ளது. தமிழகத்திலும் இதுபோல கொரோனா அபாயமற்ற பேருந்து சேவையைத் துவங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories