இந்தியாவில் 2 நாட்களில் கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு உயர்ந்தது மக்களிடையே பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஒருவித காரணமாக இருப்பது டெல்லி நிஜாமுதீனில் நடைபெற்ற மத நிகழ்ச்சி.
இதில் இந்தியாவில் உள்ளவர்களை தவிர சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் இருந்து வந்தவர்களும் பங்கேற்றிருந்திருக்கிறார்கள். அவர்களிடம் இருந்தே கொரோனா தொற்றூ இந்தியாவில் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் அந்த மாநாட்டில் பங்கேற்ற ஏராளமான இந்தியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த 1,131 பேரில் 515 பேரை கண்டறிந்துள்ள நிலையில், 616 பேரை தேடும் பணியில் சுகாதாரத்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், பிப்ரவரி 1ம் தேதியே வெளிநாட்டினர் இந்தியாவிற்குள் வர தடை விதித்திருந்தால் இந்த தப்லிகி மாநாட்டு குழப்பம் ஏற்பட்டிருந்திருக்காது என பா.ஜ.க மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும், ஆரம்பத்திலேயே வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய இந்தியர்களை விமான நிலையங்களியே பரிசோதித்து 14 நாட்கள் தனிமைப்படுத்தியிருந்தால் இந்த குழப்பங்கள் அனைத்தும் ஏற்பட்டிருந்திருகாது. இந்த தடை விதிக்க தாமதம் ஆனது ஏன்? எனவும் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.