இந்தியா

கொரோனா ஊரடங்கால் முடங்கிய பிழைப்பு... சொந்த ஊர்களுக்கு கால்நடையாகவே படையெடுத்த கூலித் தொழிலாளர்கள்!

கூலித் தொழிலாளர்களுக்கான நிதி உதவியை போர்க்கால அடிப்படையில் வழங்க அரசு வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கொரோனா ஊரடங்கால் முடங்கிய பிழைப்பு... சொந்த ஊர்களுக்கு கால்நடையாகவே படையெடுத்த கூலித் தொழிலாளர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா அச்சம் காரணமாக இந்தியாவில் ஏப்ரல் 14 வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஊரடங்கு உத்தரவால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டாலும், அதைவிட, அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து தினக் கூலித் தொழிலாளர்களே பெரிதும் பாதிப்பைச் சந்தித்து வருகிறார்கள்.

இதற்காக மத்திய அரசு 1.70 லட்சம் கோடி ரூபாய் நிதியை தற்போது ஒதுக்கி இருந்தாலும், அது போர்க்கால அடிப்படையில் அவர்களுக்கு சென்று சேருமா என்ற ஐயப்பாடே எழுகிறது.

கொரோனா ஊரடங்கால் முடங்கிய பிழைப்பு... சொந்த ஊர்களுக்கு கால்நடையாகவே படையெடுத்த கூலித் தொழிலாளர்கள்!

இப்படி இருக்கையில், வட மாநிலங்களில் உள்ள பெரும்பாலான கூலித் தொழிலாளர்கள் பலர் உண்ண உணவு கூட கிடைக்காததால் சொந்த கிராமத்திற்கு கால் நடையாக படையெடுத்துச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. டெல்லியின் ஆனந்த் விஹார், உத்தர பிரதேசத்தின் எட்டாவா போன்ற பல பகுதிகளில் இருந்து மக்கள் சாலை மார்க்கமாக நடந்து செல்கின்றனர்.

அதன்படி, கொரோனா ஊரடங்கால் எவ்வித அடிப்படை வசதியும் கிடைக்காத அதிருப்தியில் ஆக்ரா-கான்பூர் நெடுஞ்சாலை வழியாக கூலித் தொழிலாளர்கள் நடந்தே தங்களது கிராமத்துக்கு செல்கின்றனர். அதில், “ஃபிரோசாபாத் சிரசகஞ்ச் பகுதியில் இருந்து கான்பூரில் உள்ள கட்டம்பூர் பகுதிக்கு 220 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடந்து தான் பயணித்துக் கொண்டிருக்கிறேன்” என ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு ஒருவர் பேட்டி கொடுத்துள்ளார்.

அதேபோல, நூர்ஜஹான் என்ற மற்றொரு கூலித் தொழிலாளி பேசும்போது “கான்பூரில் உள்ள எனது சொந்த ஊரான அபகர்பூருக்கு செல்ல என் நடை பயணத்தை நேற்று தொடங்கினேன். இரண்டு நாட்களில் சென்றடைந்து விடுவேன் என நினைக்கிறேன்” எனக் கவலையுடன் கூறியுள்ளார்.

ஆனால் டெல்லி மாநில முதலமைச்சர் கெஜ்ரிவால், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள கூலித் தொழிலாளர்களுக்கு ரூ.5000 வழங்கப்படும் என அறிவித்திருந்தார். முறையான விழிப்புணர்வை ஏற்படுத்தி தினசரி தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த நிவாரணத் தொகை சென்றடைய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

banner

Related Stories

Related Stories