இந்தியா

கொரோனா சிகிச்சைக்கு உபகரணங்கள் வாங்க ரூ.56.17 லட்சம் ஒதுக்கீடு : சு.வெங்கடேசன் அறிவிப்பு!

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சைப் பிரிவுக்கு உபகரணங்கள் வாங்குவதற்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 56.17 லட்சம் வழங்கியுள்ளார்.

கொரோனா சிகிச்சைக்கு உபகரணங்கள் வாங்க ரூ.56.17 லட்சம் ஒதுக்கீடு : சு.வெங்கடேசன் அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உலகம் முழுவதும் 185 நாடுகளுக்கும் மேல் கொரோனா வைரஸ் பரவி மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 4,22,566-க்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி 18,907 பேர் பலியாகி உள்ளனர்.

இந்தியாவில் இதுவரை 11 பேர் பலியாகி உள்ளனர். 562 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு 15 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் ஒருவர் மதுரை மாவட்டத்தில் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா சிகிச்சை பிரிவுக்கு தேவைப்படும் உபகரணங்களை வாங்க ரூ.56.17 லட்சம் நிதி ஒதுக்கி மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில், “மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சைப் பிரிவுக்கு உபகரணங்கள் வாங்குவதற்கு எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 56.17 லட்சம் வழங்கியுள்ளேன்” என தெரிவித்துள்ளார். மேலும், 3 வென்டிலேட்டர்கள் உட்பட 17 வகையான உபகரணங்கள் அடங்கும் என குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories