இந்தியா

“ஊரடங்கின் போது ஏற்படும் உணவுச்சிக்கலை தீர்க்க திட்டம் இருக்கிறதா?” : மோடி அரசுக்கு காங்கிரஸ் கேள்வி?

கொரோனா வைரஸ் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? மருத்துவர்கள், ஊழியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு என்ன உயிர்பாதுகாப்பு உள்ளது? என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

“ஊரடங்கின் போது ஏற்படும் உணவுச்சிக்கலை தீர்க்க திட்டம் இருக்கிறதா?” : மோடி அரசுக்கு காங்கிரஸ் கேள்வி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கொரோனா பாதிப்பு இந்தியாவில் தீவிரமடைய துவங்கியுள்ளது. மத்திய மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக எடுக்கத்துவங்கியுள்ளனர்.

பல மாநிலங்களின் முக்கிய நகரங்கள் கொரோனா பாதிப்பால் மூட அந்ததந்த மாநில அரசுகள் உத்தரவிட்ட நிலையில்; நேற்றைய தினம் நாட்டுமக்களிடையே உரையாடிய பிரதமர் மோடி 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவைக் கொண்டுவந்தார்.

மக்கள் ஊரடங்கு உத்தரவை கட்டாயமாக கடைபிடிக்கவேண்டும் எனவும் மருத்துவ கட்டமைப்புக்கு என ,15,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யதால்; மக்கள் நல திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படி எந்த ஒரு திட்டமும் அறிவிக்காததது நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிரதமர் மோடி கொண்டுவந்த ஊரடங்கு உத்தரவை அனைத்து அரசியல் கட்சியினரும் வரவேற்பு அளித்தாலும், மக்களுக்கு ஏற்ற திட்டங்கள் இல்லை என கடுமையாக விமர்சித்துவருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், கொரோனா வைரஸைக் கடுப்படுப்படும் நடவடிகைக்கயாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அரசு கொண்டுவந்துள்ளது. இந்த சூழலில் அனைத்து ஏழை மக்களுக்கு ரூ.7,500 நிதி உதவியை உடனடியாக வழங்கவேண்டும்.

கொரோனா வைரஸுக்கு எதிராக நாடு தீவிரமாக போராடும்; நிச்சயம் தோற்கடிக்கடிக்கும், ஆனால் இது தலைமைப்பதவிக்கான மிக்கடுமையான சோதனைக் காலம்; அதனை மோடி அரசு ஏற்க தயாராக இல்லை என்பதே புரிகிறது.

“ஊரடங்கின் போது ஏற்படும் உணவுச்சிக்கலை தீர்க்க திட்டம் இருக்கிறதா?” : மோடி அரசுக்கு காங்கிரஸ் கேள்வி?

அதுமட்டுமின்றி, கொரோனா வைரஸ் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? மருத்துவர்கள், ஊழியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு என்ன உயிர்பாதுகாப்பு உள்ளது? இந்த ஊரடங்கு உத்தரவின்போது ஏற்படும் உணவுச்சிக்கலை தீர்க்க போதுமான திட்டம் உங்களிடம் இருக்கிறதா. இந்த ஊரடங்கில் சாதாராண எளிய மக்கள் என்ன செய்யப்போகிறார்கள்; அவர்களால் என்ன செய்யமுடியும்” என கேள்வி எழுப்பியுள்ளார்.

banner

Related Stories

Related Stories