இந்தியா

“கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ந்தும் பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன்?” - மு.க.ஸ்டாலின் கேள்வி!

கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும்போது பெட்ரோல், டீசல் விலையை உடனடியாக உயர்த்துவோர், இப்போது விலையை குறைக்க வேண்டாமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

“கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ந்தும் பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன்?” - மு.க.ஸ்டாலின் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும்போது பெட்ரோல், டீசல் விலையை உடனடியாக உயர்த்தும் எண்ணெய் நிறுவனங்களும் அரசும், விலை இறங்கும்போது பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்க வேண்டாமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக்கொள்கின்றன. பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல், சவுதி அரேபியா கச்சா எண்ணெய் விலையை கணிசமாக குறைத்தது போன்ற காரணங்களால் கச்சா எண்ணெய் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. ஆனால், இந்த கடுமையான விலை சரிவு இந்தியாவின் பெட்ரோல், டீசல் விலையில் எதிரொலிக்கவில்லை.

2014-ஆம் ஆண்டு கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 111.80 டாலராக இருந்தபோது பெட்ரோல் விலை லிட்டருக்கு 74.76 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 59.31 டாலராக இருந்தபோது ஒரு லிட்டர் பெட்ரோல் 74.68 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

“கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ந்தும் பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன்?” - மு.க.ஸ்டாலின் கேள்வி!

தற்போது கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 31.02 டாலராக இருக்கும் நிலையில் பெட்ரோல் விலை ரூபாய் 73.33 ஆக இருக்கிறது. மூலப் பொருளான கச்சா எண்ணெய் விலை குறையும்போது பெட்ரோ, டீசல் விலையும் குறைவதுதானே நியாயம்.

கச்சா எண்ணெய் விலை உயர்வைக் காரணம் காட்டி உடனடியாக பெட்ரோல், டீசல் விலையை ஏற்றி மக்களின் தலையில் சுமையை ஏற்றும் எண்ணெய் நிறுவனங்கள் இப்போது மட்டும் விலையைக் குறைக்காமல் லாபத்தை அள்ளி வைத்துக்கொள்வது ஏன் எனும் கேள்வி எழுந்துள்ளது.

எண்ணெய் நிறுவனங்களின் இத்தகைய கொள்ளை முயற்சியை மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசும் வேடிக்கை பார்க்கிறது.

இந்நிலையில், இதுகுறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது :

“உலகளாவிய அளவில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்து வருவதால், அதன் பலன்களை இந்திய நுகர்வோருக்கு வழங்கும் நடவடிக்கையில் மத்திய மாநில அரசுகள் விரைவாகச் செயல்பட வேண்டும். பெட்ரோல், டீசல், எல்.பி.ஜி விலை குறைப்பு பொருளாதார வளர்ச்சியையும் தூண்டும்.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயரும்போது உடனடியாக உயர்த்தும் அரசுகள், இப்போது கடுமையான விலை சரிவின்போது பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டாமா?” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

banner

Related Stories

Related Stories