டெல்லி வன்முறை தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், “சட்டங்களை அமல்படுத்த தவறினால் ஜனநாயகம் தோல்வியடையும்” எனக் கூறியதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபில் பதிலடி கொடுத்துள்ளார்.
பா.ஜ.க அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், சி.ஏ.ஏ-வுக்கு ஆதரவாக பேரணி நடத்துவதாகக் கூறி வன்முறையில் இறங்கியது இந்துத்வா கும்பல்.
வடகிழக்கு டெல்லியில் வெடித்த வன்முறை கிட்டத்தட்ட 50 உயிர்களைக் காவு வாங்கி இருக்கிறது. 200க்கும் அதிகமானோர் படுகாயமடைந்திருக்கிறார்கள். முஸ்லிம்களின் கடைகளுக்கும், வீடுகளுக்கும் தீ வைக்கப்பட்டது.
இதுகுறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறுகையில், “போலிஸ் சட்டங்களை கடுமையாக அமல்படுத்தத் தவறினால் ஜனநாயகம் தோல்வியடையும்” எனத் தெரிவித்தார்.
அவரது கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபில், “அஜித் தோவல் கூறியது உண்மைதான். அதேபோல், வகுப்புவாத வைரசாஈ பரப்புவதை பா.ஜ.ஆ தலைவர்கள் அனுமதித்தாலும், அவர்களுக்கு எதிராக இப்போது வரையில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யாமல் இருந்தாலும், உள்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்காமல் இருந்தாலும், போலிஸ் கமிஷனர் அமைதி காத்தாலும், இந்த பிரச்னையை நான்கு வாரங்களாக நீதிமன்றம் ஒத்திவைத்தாலும் கூட ஜனநாயகம் தோல்வியடையும்” எனத் தெரிவித்துள்ளார்.