இந்தியா

நரேந்திர தபோல்கரை இந்துத்வா கும்பல் சுட்டுக்கொல்லப் பயன்படுத்திய துப்பாக்கி கண்டெடுப்பு - சி.பி.ஐ தகவல்!

தபோல்கர் கொலை வழக்கில் அவரை கொல்லப் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கியை கண்டுபிடித்துள்ளது சி.பி.ஐ.

நரேந்திர தபோல்கரை இந்துத்வா கும்பல் சுட்டுக்கொல்லப் பயன்படுத்திய துப்பாக்கி கண்டெடுப்பு - சி.பி.ஐ தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புனேவைச் சேர்ந்த எழுத்தாளரும், மருத்துவருமான நரேந்திர தபோல்கர் கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கும்போது ‘சனாதன் சன்ஸ்தா’ என்ற இந்து அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

மூட நம்பிக்கைகள், வலதுசாரி அமைப்பாளர்களின் கொள்கைகளை எதிர்த்துப் பேசியதால் சுட்டுக்கொல்லப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது. தபோல்கர் கொல்லப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடைபெற்று வருகிறது.

இதில், கடந்த ஆண்டு இந்து அமைப்பைச் சேர்ந்த சஞ்சீவ் புனலேகர் மற்றும் விக்ரம் பவே ஆகியோரை சி.பி.ஐ. கைது செய்தது. மேலும் 7 பேர் இந்த விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக இன்னும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நரேந்திர தபோல்கரை இந்துத்வா கும்பல் சுட்டுக்கொல்லப் பயன்படுத்திய துப்பாக்கி கண்டெடுப்பு - சி.பி.ஐ தகவல்!

இந்நிலையில், தபோல்கரை சுட்டுக்கொல்லப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை சி.பி.ஐ போலிஸார் கண்டுபிடித்துள்ளனர். இதனை நார்வேயைச் சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தேடுதல் வேட்டைக்காக 7.5 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும், கைப்பற்றப்பட்ட துப்பாக்கியையும், தபோல்கரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிட்டுள்ள துப்பாக்கிக் குண்டின் அளவையும் ஒப்பிட்டு மேற்கொண்டு விசாரணை மேற்கொள்ளப்படும் என சி.பி.ஐ தரப்பு தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories