இந்தியா

“FASTag பாதையில் தவறுதலாக நுழைந்த வாகனங்களிடம் வசூல் வேட்டை” : ரூ.20 கோடி கல்லா கட்டிய மோடி அரசு!

ஃபாஸ்டேக் பாதையில் தவறுதலாக நுழைந்த வாகனங்களிடமிருந்து ரூ. 20 கோடி வசூலாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

“FASTag பாதையில் தவறுதலாக நுழைந்த வாகனங்களிடம் வசூல் வேட்டை” : ரூ.20 கோடி கல்லா கட்டிய மோடி அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் ‘ஃபாஸ்டேக்’ என்ற மின்னணு முறையில் சுங்க கட்டணம் வசூலிக்கும் முறையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் சுங்கச்சாவடிகளில் வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக சுங்கக்கட்டணம் செலுத்தும் வகையில், ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனங்கள் சுங்கச்சாவடிக்குள் நுழையும் போது தானாக வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டு விடும்.

இதற்காக மணிக்கணக்கில் சுங்கச்சாவடியில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என அறிவிக்கப்பட்டது. இந்த ஃபாஸ்டேக் முறை அறிமுகப்படுத்துவதற்கு முன்பே ஃபாஸ்டேக் அட்டை பற்றாக்குறைகள் என பல்வேறு குளறுபடிகளால் மக்கள் மிகவும் அலைக்கழிக்கப்பட்டனர்.

“FASTag பாதையில் தவறுதலாக நுழைந்த வாகனங்களிடம் வசூல் வேட்டை” : ரூ.20 கோடி கல்லா கட்டிய மோடி அரசு!

அதுமட்டுமின்றி, தற்போது சுங்கச்சாவடிகளில் 75% பாதைகளில் ஃபாஸ்டேக் உள்ள வாகனங்களும் எஞ்சிய 25% பாதைகளில் ஃபாஸ்ட்டேக் ஸ்டிக்கர் இல்லாத வாகனங்கள் செல்லவும் அனுமதிக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

இந்நிலையில், ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டாமல் தவறுதலாக ஃபாஸ்டேக் பாதையில் நுழைந்த வாகனங்களிடமிருந்து இதுவரை ரூ.20 கோடி வசூல் ஆகியுள்ளதாகத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.

ஃபாஸ்டேக் முறையை கொண்டுவந்த மோடி அரசு தவறுதலாக ஃபாஸ்டேக் பாதையில் சென்று கட்டணம் செலுத்தினால் இரட்டிப்பு தொகை வசூலிக்கப்படும் என தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டாமல் தவறுதலாக ஃபாஸ்டேக் பாதையில் நுழைந்த 18 லட்சம் வாகன ஓட்டிகளிடமிருந்து சுமார் 20 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories