மோடி அரசின் கார்ப்ரேட் ஆதரவு காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையைத் தொடர்ந்து, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் மாதந்தோறும் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.
தொடர்ந்து ஐந்து மாதங்களாக உயர்த்தப்பட்ட சிலிண்டர் விலை, ஃபிபரவரி மாதம் ஒரே அடியாக 147 ரூபாய் அளவிற்கு அதிகரிக்கப்பட்டது. இதனால் மானிய எரிவாயு சிலிண்டரின் விலை, 881 ரூபாய் அளவிற்கு உயர்ந்தது.
இந்நிலையில், சத்தீஸ்கரில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், குளிர்காலங்களில் சமையல் எரிவாயு சிலிண்டரின் பயன்பாடு அதிகரிப்பதால், அதற்கான தேவையும் அதிகரித்துள்ளது.
அதனால் எரிவாயுத் துறையில் நெருக்கடி நிலை ஏற்பட்டது; அதனை சமாளிக்கவே விலையையும் உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று கூறியுள்ளார். அப்போது குறிக்கிட்ட பத்திரிக்கையாளர்கள் குளிர் உச்சத்தில் இருந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் விலை உயர்த்தப்படாதது ஏன்? என கேள்வி எழுப்பினார்கள். ஆனால் அதற்கு அமைச்சர் பதில் அளிக்காமல் சென்றுவிட்டார்.
முன்னதாக டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வந்ததால், 2019 டிசம்பர், 2020 ஜனவரிஆகிய 2 மாதங்கள் மட்டும் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்படவில்லை. ஆனால், தேர்தல் முடிந்த பிறகு விலை உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.