அமெரிக்காவில் கடந்த 2017-ம் ஆண்டு அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்பும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் முதல் முறையாக சந்தித்து கொண்டனர். அந்த சந்திப்பின் நினைவாக, ஹரியானாவில் உள்ள மரோரா கிராமத்துக்கு டிரம்ப்-பின் பெயர் சூட்டப்பட்டது.
அதைத்தொடர்ந்து, வாஷிங்டன்னின் சமூக சேவை நிறுவனமான ‘சுலப் இண்டர்நேச னல்’, டிரம்ப்பின் பெயர் சூட்டப்பட்ட மரோரா கிராமத்தின் முகத்தோற்றத்தையே மாற்றப் போவதாக அறிவித்தது.
குறிப்பாக, இந்த கிராமத்தில் உள்ள விதவை பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்; அதற்கு முன்னதாக, திறந்த வெளி கழிப்பிடங்களே இல்லாத கிராமமாக மரோரா மாற்றப்படும் ‘சுலப் இண்டர்நேசனல்’ கூறியது.
அதன்படியே திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் துவங்கப்பட்டதுடன், பல வண்ணங்களில் கழிவறைகளும் கட்டப்பட்டன. ஆனால், திடீரென ஒருநாள், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின்படம் பொறித்த பேனர்கள், விளம்பர பலகைகள் ஆகியவற்றை சுருட்டிக்கொண்டு, ‘சுலப் இண்டர் நேசனல்’ மறைந்துவிட்டது.
அதன்பிறகு கிராமத்தின் பக்கம் அவர்கள் தலைகாட்டவில்லை. பயிற்சியாளர் வராத நிலையில், திறன் மேம்பாட்டு பயிற்சி நிலையத்தை மோடி அரசு மூடிவிட்டது. தண்ணீர் வசதி செய்துதரப்படாததால், கழிப்பறைகளும் திறக்கப்படவில்லை. ஆனால், மோடி - டிரம்ப் சந்திப்பின் நினைவாக, மரோரா கிராமத்திற்கு சூட்டப்பட்ட ‘டிரம்ப்கிராமம்’ என்ற பெயர் மட்டும் அப்படியே உள்ளது.
இதனிடையே, டிரம்ப் தற்போது இந்தியாவுக்கு வரவுள்ள நிலையில், மரோரா கிராமமக்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதன் இரண்டாண்டுகளை நினைவு கூர்ந்துள்ளனர். டிரம்பும் அவரது அதிகாரிகளும் எங்களின் கழிப்பறைக்கு எப்போது தண்ணீர் விநி யோகம் செய்ய போகிறார்கள்? என கிராம மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.