மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில் தலித் மற்றும் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்த வன்முறை சம்பவங்களில் ஈடுபடும் கும்பல்கள் “பாரத் மாதா கீ ஜெய்” என கோஷமிடுகின்றனர். பொது இடங்களில் இந்த கோஷங்களை கேட்டாலே மக்கள் அச்சமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் உரைகள் மற்றும் படைப்புகள் குறித்த புத்தகம் வெளியிடும் நிகழ்வு நேற்று டெல்லியில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சுதந்திர இந்தியாவை ஆட்சி செய்த நேரு, இந்தியாவிற்கு பெறும் பங்களிப்புகளை செலுத்தினார். மேலும் நேரு ஓர் இலக்கிய ஆளுமை என்றும் புகழ்ந்து பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், “இன்றை நவீன இந்தியாவிற்கு அடித்தளமிட்டவர், அவரால்தான் இந்தியாவின் பல்கலைக்கழகங்களும் கலாச்சார நிறுவனங்களும் உருவாகின. ஆனால் இன்று அவரைத் தவறாக சித்தரிக்கிறார்கள்.
வரலாற்றை வேண்டுமென்றே படிக்காமல் தங்களின் முடிவுகளின் அடிப்படையில் கருத்துகளை தெரிவிக்க முயற்சிகிறார்கள். அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால், போலி குற்றச்சாட்டுகளை நிராகரித்து, சரியானதை மட்டுமே எடுத்துக்காட்டும் வல்லமை வரலாறுக்கு உண்டு. எனவே இந்த நடவடிக்கையை உங்களால் தொடர முடியாது.
அதுமட்டுமின்றி, இன்று இந்தியாவில் பயங்கரவாத சிந்தனையை வளர்க்க, தேசியவாதமும், பாரத் மாதா கீ ஜெய் கோஷமும், தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.