இந்தியா

"5.4% ஆக வளர்ச்சி குறையும்; மோடி ஆட்சியில் பொருளாதாரம் வேகமாக வீழ்ச்சியடையும்" - எச்சரிக்கும் மூடிஸ்!

மோடி ஆட்சியில் நிலவி வரும் பொருளாதார மந்தநிலை காரணமாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கணிப்பை 5.6 சதவீதத்திலிருந்து 5.4 சதவீதமாக குறைத்துள்ளது மூடிஸ் நிறுவனம்.

"5.4% ஆக வளர்ச்சி குறையும்; மோடி ஆட்சியில் பொருளாதாரம் வேகமாக வீழ்ச்சியடையும்" - எச்சரிக்கும் மூடிஸ்!
கோப்பு படம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சர்வதேச கடன் மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. முன்னதாக வெளியிட்டிருந்த பொருளாதார வளர்ச்சி கணிப்பில் இருந்து தற்போது மதிப்பைக் குறைந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மூடிஸ் நிறுவனம், கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதம் எனக் கூறியிருந்தது. பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம், ஜி.டி.பி மதிப்பை 6.2 சதவிகிதம் என்று 6 புள்ளிகளைக் குறைத்தது.

அதனையடுத்து, நவம்பரில் வெளியிட்ட அறிக்கையில் முந்தைய கணிப்பிலிருந்த மதிப்பை 0.4 புள்ளிகள் குறைத்து 5.6 சதவிகிதத்திற்கு கொண்டு சென்றது. இதனையடுத்து தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்பு மதிப்பிட்டதை விட பொருளாதார வளா்ச்சியில் காணப்படும் தேக்க நிலை நீடிக்கிறது.

"5.4% ஆக வளர்ச்சி குறையும்; மோடி ஆட்சியில் பொருளாதாரம் வேகமாக வீழ்ச்சியடையும்" - எச்சரிக்கும் மூடிஸ்!

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி வேகமாக வீழ்ச்சியடைந்து வருகிறது. குறிப்பாக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலையின் மீட்சி வேகம் எதிா்பாா்த்ததை விட குறைவாக இருப்பதன் காரணமாக நடப்பாண்டில் இந்தியப் பொருளாதாரம் 5.4 சதவீதம் வளா்ச்சியை மட்டுமே எட்டும்” என மதிப்பிடப்பட்டுள்ளது.

‘மூடிஸ்’ நிறுவனத்தின் குறைக்கப்பட்ட வளர்ச்சிக் கணிப்பு வெளியானதன் காரணமாக பங்கு வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க சரிவு காணப்படுகிறது. மேலும் முக்கியத் துறைகளின் பங்குகள் வீழ்ச்சியடைந்துள்ளன.

அதுமட்டுமின்றி, “கடன் மதிப்பீட்டு தரநிலையில் எதிர்மறையான நிலைக்கு இந்தியா சென்றுள்ளதாகவும் இதன்மூலம் முதலீடுகள் குறையும்” என்று மூடிஸ் நிறுவனம் முன்பே எச்சரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கணிப்பு மோடி அரசிற்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories