இந்தியா

“பொருளாதார சரிவுக்கு இதுதான் காரணம்” - RBI ஆளுநர் சக்திகாந்த தாஸ் ஒப்புதல் வாக்குமூலம்!

பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டதற்காக காரணங்களை ஒப்புதல் வாக்குமூலமாக அளித்துள்ளும் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ்.

“பொருளாதார சரிவுக்கு இதுதான் காரணம்” - RBI ஆளுநர் சக்திகாந்த தாஸ்  ஒப்புதல் வாக்குமூலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாட்டின் பொருளாதார மந்த நிலைக்கு, தொழில் உற்பத்தி வீழ்ச்சி, வங்கிகளின் வாராக்கடன் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களே முக்கியக் காரணங்கள் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

PTI செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், 2019-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் மந்தநிலை தொடங்கியது என்றும், அதனை கருத்தில்கொண்டு, வங்கிக் கடன்களுக்கான வட்டியை தொடா்ந்து 5 முறை RBI குறைத்தது என்றும் தெரிவித்தார்.

சர்வதேச வணிகத்தில் காணப்பட்ட நிலையில்லாத்தன்மை, உள்நாட்டில் மக்களுக்கான தேவை குறைந்தது, தொழிற்சாலைகளின் உற்பத்தி குறைந்தது, வங்கிகளில் காணப்பட்ட வாராக்கடன்கள் பிரச்னை, தொழிற்சாலைகளில் காணப்பட்ட அதிக கடன் ஆகியவையே நாட்டின் பொருளாதார மந்த நிலைக்கு முக்கியக் காரணங்கள் என்றும் சக்திகாந்த தாஸ் கூறினார்.

“பொருளாதார சரிவுக்கு இதுதான் காரணம்” - RBI ஆளுநர் சக்திகாந்த தாஸ்  ஒப்புதல் வாக்குமூலம்!

மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால் பொருளாதாரத்தில் சிறிய அளவிலான முன்னேற்றம் காணப்படுவதாகவும், இந்த முன்னேற்றம் தொடருமா என்பதைப் பொறுத்திருந்துதான் காண வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், மக்களின் தேவையை அதிகரிக்கவும், நுகர்வை அதிகரிக்கவும் வழிவகுக்கும் என தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“பொருளாதார சரிவுக்கு இதுதான் காரணம்” - RBI ஆளுநர் சக்திகாந்த தாஸ்  ஒப்புதல் வாக்குமூலம்!

மேலும், நிலம் மற்றும் தொழிலாளர் தொடர்பான விவகாரங்களில் சீா்திருத்தங்களை மேற்கொள்வது அவசியம் என்ற அவர், வேளாண் பொருள்களை சந்தைப்படுத்துதல், திறன் மேம்பாடு ஆகியவற்றிலும் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பயனளித்தால், 2020-21 ஆம் நிதியாண்டில் பொருளாதார வளா்ச்சி அதிகரிக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளதாகவும் சக்திகாந்த தாஸ் கூறினார்.

banner

Related Stories

Related Stories