இந்தியா

“கொத்துக் கொத்தாக மடியும் உயிர்கள்” : கொரோனா வைரஸ் தாக்குதல் பலி எண்ணிக்கை 1,780 ஆக அதிகரிப்பு..!

சீனாவில் 'கொரோனா' வைரஸ் வெகுவேகமாகப் பரவி வருவதால் இதுவரை 1,780 பேர் பலியாகியுள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

“கொத்துக் கொத்தாக மடியும் உயிர்கள்” : கொரோனா வைரஸ் தாக்குதல் பலி எண்ணிக்கை 1,780 ஆக அதிகரிப்பு..!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சீனாவில் 'கொரோனா' வைரஸ் வெகுவேகமாகப் பரவி வருவதால் இதுவரை 1,780 பேர் பலியாகியுள்ளனர் எனும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதனால், சீனாவின் பொருளாதார நிலை மோசமடைந்துள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா எனப்படும் கொடூரமான வைரஸ் அந்த நாடு முழுவதும் பரவி வருகிறது. சீனாவில் தொடங்கி, ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளிலும் இந்த வைரஸ் தாக்குதல் அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் குறித்து முதலில் எச்சரித்த லீ வெண்லியாங் என்ற மருத்துவரும் கொரோனா வைரஸ் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது அந்நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

“கொத்துக் கொத்தாக மடியும் உயிர்கள்” : கொரோனா வைரஸ் தாக்குதல் பலி எண்ணிக்கை 1,780 ஆக அதிகரிப்பு..!

இந்நிலையில், சீனாவின் ஹூபே நகரில் ஒரே நாளில் 242 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பாதிப்பிற்கு பலியானோர் எண்ணிக்கை தற்போதுவரை 1,780 ஆக அதிகரித்துள்ளது என சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், சீனா முழுவதும் 48,200க்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது. இன்னும் பல்லாயிரக்கணக்கானோர் வைரஸ் பாதிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கான பணியில் உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவர் குழுவுடன் சீன மருத்துவ நிபுணர்கள் தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories